என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 2019 bmw s1000rr
நீங்கள் தேடியது "2019 BMW S1000RR"
பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்த எஸ். 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #BMW
பி .எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மோட்டார்சைக்கிள் எஸ். 1000 ஆர்.ஆர். மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது. இது விரைவில் இந்திய சாலைகளில் சீறிப் பாய உள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் குறைந்த எடை அதிக திறன் கொண்டதாக இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
999 சி.சி. என்ஜின் கொண்ட இது 13,500 ஆர்.பி.எம். வேகத்தில் 207 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். அதேபோல 11 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் 113 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலை விட இதில் 8 ஹெச்.பி. திறன் அதிகமாகும்.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஷிப்ட் காம் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது 6 கியர்களைக் கொண்டது. அத்துடன் ஏ.பி.எஸ். மற்றும் டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி கொண்டது. நான்கு வகையான டிரைவிங் மோட்கள் (சாலை, மழை, டைனமிக், ரேஸ்) ஆகியன இதில் உள்ளன.
முன்பகுதியில் 6.5 அங்குல திரை உள்ளது. முந்தைய மாடலை விட 11 கிலோ எடை குறைவு. அதாவது இது 197 கிலோ எடை கொண்டது. இதன் விலை ரூ. 20 லட்சத்துக்குள் இருக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
×

X