search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 Honda Navi CBS"

    ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் 2019 நவி சி.பி.எஸ். ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. #HondaNaviCBS



    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2019 நவி ஸ்கூட்டரை சி.பி.எஸ். (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய 2019 ஹோன்டா நவி விலை ரூ.47,110 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடலின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நவி மாடலை ஹோன்டா மீண்டும் விற்பனைக்கு அறிவித்திருக்கிறது.

    125சிசி-க்கும் குறைந்த திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் சி.பி.எஸ். வசதி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை ஏப்ரல் 1 ஆம் முதல் அமலாக இருப்பதையொட்டி ஹோன்டா புதிய மாடலில் சி.பி.எஸ். வசதியை சேர்த்திருக்கிறது. சி.பி.எஸ். தொழில்நுட்பம் வாகனங்களின் இருசக்கரங்களிலும் சம-அளவு பிரேக்கிங் திறன் வழங்கும்.



    புதிய ஹோன்டா நவி மாடலில் சி.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டிருப்பதை தவிர எவ்வித அம்சங்களும் புதிதாக வழங்கப்படவில்லை. இதன் வித்தியாச வடிவமைப்பு இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. எனினும், இந்த மாடல் சந்தையில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

    2019 ஹோன்டா நவி மாடலில் 110சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் ஹோன்டா ஆக்டிவா மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 8.94 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஹோன்டா நவி மாடலின் முன்பக்கம் மற்றும் பின்புறம் முறையே 12 இன்ச் மற்றும் 10 இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஹோன்டா நவி 2016 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஹோன்டா இந்தியாவின் ஆய்வு மற்றும் உற்பத்தி குழுவினரால் வடிவமைக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நவி விற்பனை ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது.
    ×