என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 2019 lok sabha
நீங்கள் தேடியது "2019 Lok Sabha"
ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 5-வது முறையாக களமிறங்க உள்ளார். #SoniaGanthi #LokSabha #RaeBareli
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. இங்கு 1971-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தேர்தல்களில் 1977-ல் இந்திரா காந்தி தோல்வியடைந்ததை தவிர, பிற தேர்தல்கள் அனைத்திலும் அந்தக்கட்சி வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார். 2006-ல் நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட 4 தேர்தல்களில் அந்த தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றிருந்தார். 2004-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.இதைத்தொடர்ந்து வருகிற தேர்தலுக்கும் ரேபரேலி தொகுதி சோனியாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இந்த தகவல் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் 5-வது முறையாக ரேபரேலி தொகுதியில் அவர் களமிறங்க உள்ளார்.முன்னதாக சோனியாவின் உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிடுவது குறித்து சந்தேகங்கள் கிளம்பி இருந்த நிலையில், அவர் போட்டியிடுவதை கட்சித்தலைமை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. SoniaGanthi #LokSabha #RaeBareli

×

X