என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 2020 volvo xc90
நீங்கள் தேடியது "2020 Volvo XC90"
வால்வோ நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலான 2020 XC90 எஸ்.யு.வி. கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #VolvoXC90
வால்வோ கார்ஸ் நிறுவனம் தனது டாப் எண்ட் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலான, 2020 XC90 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார் XC90 சீரிஸ் மாடலின் மிட்-லைஃப் அப்டேட் ஆகும். 2020 வால்வோ XC90 எஸ்.யு.வி. சில மாற்றங்களுடன், புதிய உபகரணங்களுடன் கிடைக்கிறது.
இவற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக கைனெடிக் எனர்ஜி ரிக்கவரி சிஸ்டம் (KERS) இருக்கிறது. இந்த சிஸ்டம் பிரேக்கிங் செய்யும் போது ஏற்படும் செயல்திறன் இழப்பை டார்க் அசிஸ்டண்ட்டின் போது பயன்படுத்தக்கூடிய மின்சக்தியாக மாற்றுகிறது. இது காரின் எமிஷனை குறைப்பதோடு மட்டுமின்றி வாகனத்தின் செயல்திறனை 15 சதவிகிதம் வரை அதிகப்படுத்தும்.
வால்வோவின் புதிய XC90 மாடலின் KERS காரின் வழக்கமான ஐ.சி. என்ஜினுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய பி பேட்ஜில் மின்சக்தி செயல்திறனை வழங்கும். இந்த காரில் ஐ.சி. என்ஜின் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
2020 XC90 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டி8 ட்வின் என்ஜின் பிளக்-இன் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. வடிவமைப்பில் புதிய கார் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள், புதிய வெளிப்புற நிறங்கள், முன்பக்க கிரில் உள்ளிட்டவை வித்தியாசமாக தெரிகிறது.
வால்வோ XC90 உள்புறம் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான்கு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வடிவமைப்பு தவிர, 2020 வால்வோ XC90 மாடலில் ஆறு பேர் அமரக்கூடியதாகவும் கிடைக்கிறது. மற்றபடி மேம்பட்ட சென்சஸ் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பாட்டிஃபை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய XC90 மாடலில் மேம்பட்ட ஓட்டுனர் உதவி சிஸ்டம்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிராஃபிக் அலெர்ட் சிஸ்டம், ஆட்டோ-பிரேக் அசிஸ்டண்ஸ் மற்றும் லேண் மைக்ரேஷன் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X