என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 231
நீங்கள் தேடியது "231 ரன்கள்"
மெல்போர்னில் நடைபெற்று வரும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #AUSvIND #MelbourneODI
மெல்போர்ன்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் தடுமாறியது. துவக்க வீரர் கேரே 5 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இருவரது விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் நிதானமாக ஆடி, ஸ்கோரை உயர்த்தினர்.
எனினும், யுஸ்வேந்திர சாகலின் அபாரமான பந்துவீச்சால், சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. கவாஜா (34), மார்ஷ் (39), ஹேண்ட்ஸ்கோம்ப்(58) உள்ளிட்ட 6 விக்கெட்டுகளை சாகல் கைப்பற்றி அசத்தினார். ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால், 48.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது. #AUSvIND #MelbourneODI

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், கேதர் ஜாதவ், சேஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்தனர்.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் தடுமாறியது. துவக்க வீரர் கேரே 5 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இருவரது விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் நிதானமாக ஆடி, ஸ்கோரை உயர்த்தினர்.
எனினும், யுஸ்வேந்திர சாகலின் அபாரமான பந்துவீச்சால், சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. கவாஜா (34), மார்ஷ் (39), ஹேண்ட்ஸ்கோம்ப்(58) உள்ளிட்ட 6 விக்கெட்டுகளை சாகல் கைப்பற்றி அசத்தினார். ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால், 48.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது. #AUSvIND #MelbourneODI
×

X