search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 Anganwadi Centres"

    • அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
    • உடுமலை ஒன்றியத்தில் 143 அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

    உடுமலை:

    3வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரம்ப கல்வி, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல், மொழி, அறிவு மற்றும் சமூக மன எழுச்சி வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு அடித்தளமாக இருப்பவை அங்கன்வாடி மையங்கள்.

    ஆனால்பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில், மின் வசதி இருப்பதில்லை. இதனால் மின்விளக்கு, மின் விசிறி உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்களையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளும், அமைப்பாளர்களும் இதனால் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் அங்கன்வாடி மையங்கள், அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வகையில் உடுமலை ஒன்றியத்தில் மின் வசதி இல்லாத 25 அங்கன்வாடி மையங்களில்புதிதாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கென மின்வாரியத்திற்கு, வைப்புத்தொகையாக தலா 2,650 ரூபாய் வீதம், 66,250 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா கூறியதாவது: -

    உடுமலை ஒன்றியத்தில் 143 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 25 மையங்களில் மின் வசதி இல்லாதிருந்தது. மின்வசதிக்கு ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.

    ×