search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 lakh"

    • டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது.
    • இந்த எண்ணுக்கு மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர்.

    ஐதராபாத்:

    எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.

    இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

    இந்நிலையில், இந்தியாவின் தெலுங்கானாவில் ஒருவர் ரூ.25 லட்சம் செலவு செய்து டிஎஸ்-09-9999 என்ற பேன்சி நம்பரை வாங்கினார்.

    பேன்சி பதிவு எண்கள் பெறுவதற்கான இணையவழி ஏலத்தை தெலுங்கானா சாலை போக்குவரத்து ஆணையம் நடத்தியது. அப்போது டிஎஸ்-09-9999 என்ற நம்பருக்கு கடும் போட்டி நிலவியது. மொத்தம் 11 பேர் இதில் போட்டியிட்டனர்.

    இறுதியாக, கோடீஸ்வரர் ஒருவர் தனது விலையுயர்ந்த காருக்காக இந்த எண்ணை 25,50,002 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

    தெலுங்கானாவில் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கிய பேன்சி நம்பர் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த உ.பி.யைச் சேர்ந்த 2 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும், அரசு வேலையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #compensationformartyrs #YogiAdityanath
    லக்னோ:

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.

    மேலும், இந்த தாக்குதலில் பலியான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுன் ராஜ்பர், ரவிநாத் சிங் படேல் ஆகிய 2 பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #compensationformartyrs #YogiAdityanath
    ×