search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd Dose"

    • கொரோனா வழிகாட்டு முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக உயர தொடங்கியுள்ளது.

    சிறப்பு முகாம்கள்

    இதன் காரணமாக கொரோனா வழிகாட்டு முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழக முழுவதும் அமைக்க அரசு உத்தரவிட்டது.

    2,012 மையங்கள்

    அதன்படி நெல்லை மாவட்டத்திலும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,012 மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் பெரும்பாலான முகாம்களில் பொதுமக்கள் கூட்டத்தை காண முடியவில்லை. ஒரு சில முகாம்களில் 10-க்கும் குறைவான பொதுமக்களே தடுப்பூசி செலுத்தி இருந்தனர்.

    வெறிச்சோடிய மையங்கள்

    முதல் தவணை செலுத்தி 2-வது தவணை செலுத்த வேண்டிய காலகட்டம் முடிந்த பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இது தவிர 102 நடமாடும் குழுக்கள் மூலம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் பெரும்பாலான வீடுகளில் இருந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டினர்.

    நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வண்ணார்பேட்டை மேம்பாலம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள், பெரிய ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இவற்றில் 10-க்கும் குறைவான பொதுமக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    ×