search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd stage flood warning"

    • மஞ்சளாறு அணை 53 அடியை கடந்துள்ளதால் 2-ம் கட்ட ெவள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாற்று கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. 57 அடிஉயரம் கொண்ட அணையில் 55 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. சில நாட்களுக்கு முன்பு 51 அடியை கடந்ததும் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் தற்போது 53 அடியை கடந்துள்ளதால் 2-ம் கட்ட ெவள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாற்று கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் இறங்கி செல்ல கூடாது, கால்நடைகளை குளிப்பாட்டக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.10 அடியாக உள்ளது. 57 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. அணைக்கு 301 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.62 அடியாக உள்ளது. 102 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.21 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிற நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டதால் சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். இதனைதொடர்ந்து 3 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் சாரல்விழா நடைபெறுவதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    பெரியாறு 1, தேக்கடி 1.2, வைகை அணை 2.2, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 2.8, அரண்மனைப்புதூர் 4, ஆண்டிப்பட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×