search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd t20 match"

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கார்டிப் நகரில் நாளை நடக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND
    கார்டிப்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித்தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கார்டிப் நகரில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

    முதல் ஆட்டத்தை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இந்திய அணி திகழ்கிறது. லோகேஷ் ராகுல் கடந்த போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்தார்.


    அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, ரெய்னா, டோனி ஆகியோரும் பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

    குல்தீப் யாதவ் தனது அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்தை கடந்த போட்டியில் நிலை குலைய வைத்தார்.



    இதேபோல யசுவேந்திர சாஹல், உமேஷ்யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். நாளை போட்டிக்கான அணியில் மாற்றம் எதுவும் இருக்காது.

    மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    பட்லர், ஜேசன்ராய் ஆகியோரை தவிர எந்த பேட்ஸ்மேனும் ரன்களை குவிக்கவில்லை. இதேபோல பந்துவீச்சிலும் முத்திரை பதிக்கவில்லை. இதனால் இந்த இரண்டையும் சரி செய்யும் வகையில் ஆட வேண்டும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்தியாவை வீழ்த்த போராடும்.

    இரு அணிகளும் இதுவரை 12 ஆட்டத்தில் விளையாடி உள்ளன. தலா 6 போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டமும் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் 2 டெலிவிசன்களில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #ENGvIND
    ×