search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 deep sea creatures"

    சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கடியில் வாழும் 30 வகையான புதிய உயிரினங்களை கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
    பீஜிங்:

    சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் தூண்டில் இரையுடன்,கேமிரா பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் கேமிராவில் பதிவாகின. அவற்றில் 30 உயிரினங்கள் புதிய உயிரினங்கள் என்பது  ஆய்வில் தெரிய வந்தது.


    இதனைத் தொடர்ந்து, கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் சர்வதேச கடல் ஆணைய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சீனா விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆய்வில் புதிதாக கண்டறியப்பட்ட 30 புதிய உயிரினங்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் பலவகை மீன்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் செந்நிற இறால்கள், பாம்பு வடிவ ஈல் மீன்கள், பெரிய கண்களுடன் விமானம் போன்று காட்சித் தரும் அரிய வகை மீன் உள்ளிட்ட மீன்கள் முக்கியமானவை ஆகும்.


    இதுகுறித்து பேசிய சீன ஆராய்ச்சியாளர் வாங் சன்செங் பேசுகையில், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 30 வகையான உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அவற்றின் வாழ்வு முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்கு இது உதவியாக இருக்கும்.

    ×