search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "32 Red Sanders Smuggling"

    கடந்த 6 ஆண்டுகளில் செம்மரம் கடத்த முயன்றதாக 11 முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். #RedSandersSmuggling
    ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுவதற்கு, செம்மரக்கடத்தல் விவகாரம் மட்டும்தான் காரணமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    2015-ம்ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி செம்மரம் கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    2013-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி ஆந்திர வனத்துறை அதிகாரிகள் 2 பேர் செம்மரக் கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.

    இந்த கொலைக்கு தமிழகத்தை சேர்ந்த கும்பல் தான் காரணம் என ஆந்திர போலீசார் முடிவு செய்தனர். இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 287 பேர் உள்பட 349 பேரை கைது செய்து ஆந்திர ஜெயிலில் போலீசார் அடைத்தனர். ஆதாரம் இல்லாததால் திருப்பதி சிறப்பு நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

    தமிழர்கள் விடுதலைக்கு ஆந்திர மாநில போலீசாரும், வனத்துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் 287 தமிழர்களை தவிர்த்து மற்ற கைதிகள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் விடுதலைக்கு ஆந்திர போலீசார் எதிர்ப்பை துளியும் காட்டவில்லை.

    ஆந்திர போலீசார் தமிழர்கள் என்றாலே செம்மரக் கடத்தல் கும்பல் என்ற கண்ணோட்ட பார்வையை திணித்து கைது நடவடிக்கை எடுக்க தொடங் கினர்.

    கடந்த பிப்ரவரி 18-ந் தேதி கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் இடுப்பு அளவு தண்ணீரில் 5 தமிழர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் தமிழக தொழிலாளி திருவண்ணாமலை மாவ ட்டம் ஜவ்வாதுமலை கானா மலை கிராமத்தை சேர்ந்த காமராஜ் (53) ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    கடந்த 6 ஆண்டுகளில் செம்மரம் கடத்த முயன்றதாக 11 முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 31 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலும் தமிழர்கள் தான் துப்பாக்கி சூட்டிற்கு இரையாகினர். தற்போது, 12-வது முறையாக என்கவுண்டர் நடத்தப்பட்டு உள்ளது. இவரையும் சேர்த்து 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    செம்மரக்கடத்தல் வழக்கில் ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரில், 2 ஆயிரம் பேர் தமிழர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரது மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. #RedSandersSmuggling

    ×