search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "32 years anniversary"

    • தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி நிறைய பிரச்சனை கொடுத்திருந்தார்கள்.
    • முதன் முறையாக 9 நாடுகளில் 25 நாட்கள் என கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது.

    சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் ஏழை பால் வியாபாரி அண்ணாமலை மற்றும் பணக்கார ஹோட்டல் வியாபாரி அசோக், இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயலும் அசோக்கின் தந்தை எதிர்க்கும் நட்பைச் சுற்றியே படக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இசை மற்றும் ஒலிப்பதிவு தேவாவால் இசையமைக்கப்பட்டது மற்றும் பாடல்களுக்கான வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பி.எஸ்.பிரகாஷ், படத்தொகுப்பை கணேஷ் குமார் இருவரும் செய்திருந்தனர். 1992 காலங்கட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றது அண்ணாமலை படம்.

    இந்த படம் வெளியான சமயத்தில் பல பிரச்சனைகள் நடந்திருந்தது. அண்ணாமலை படத்துக்கு அப்போது ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி நிறைய பிரச்சனை கொடுத்திருந்தார்கள். படத்தின் போஸ்டர்கள் நிறைய ஓட்ட கூடாது என பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. இதனால் படத்திற்கு போதிய அளவு விளம்பரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல் 175 நாட்கள் ஓடி வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில் அண்ணாமலை திரைப்படம் வெளியாக இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் ரஜினியின் அண்ணாமலை படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. அதில் இடம் பெற்றுள்ள "மலைடா அண்ணாமலை" "அசோக் உன் காலெண்டரி குறிச்சு வைச்சுக்கோ" போன்ற வசனங்களும் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

    அண்ணாமலை படம் 32 ஆண்டு நிறைவடைந்ததையடுத்து தனது எக்ஸ்தளத்தில் அண்ணாமலை பட போஸ்டரை பகிர்ந்துள்ளார் குஷ்பூ. அதில் கூறியிருப்பதாவது.

    உலக சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியாகிய அண்ணாமலை 27-6-1992ல் 56 அரங்கில் 50 நாள், 22 அரங்கில் 100நாள், 15 அரங்கில் 120 நாள், முதன் முறையாக 9 நாடுகளில் 25 நாட்கள் என கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது.

     அன்றைய ஆளுங்கட்சியின் தடைகளை வென்று, 61 வருட தமிழ் சினிமா வரலாற்றில் அதுவரையிருந்த வசூல் சாதனைகளை முறியடித்து புதிய வசூல் சாதனை படைத்த அண்ணாமலை இன்று 32 ஆண்டு நிறைவு அடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×