search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 PERSONS"

    • வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

    கரூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு கூட்டம் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு உடனடி வேலைகள் குறித்து பேசினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார்.

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் இயற்கையான மரணம் இல்லை என்பதாலும், மாணவி மரணத்தில் சந்தேகம் உள்ளதாலும் இதுகுறித்து காவல்துறை தீர விசாரிக்க வேண்டும். மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இந்த பிரச்சனைக்காகப் போராட வலைதளத்தில் பதிவிட்ட வாலிபர் சங்க கரூர் மாநகரத் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட நான்கு பேரை, பசுபதிபாளையம் போலீசார் அதிகாலையில் கைது செய்தது. இந்த செயலை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் ஜனநாயக விரோதமாக இவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதோடு, எதிர்காலத்தில் பொது பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகளை கைது செய்யும் போக்கை காவல்துறை கைவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் நலன் காக்கும் அரசு என பிரகடனப்படுத்திக் கொள்ளும் திமுக அரசு, காவல்துறையின் இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்திக் கரூர் மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றிப்பட்டது.

    • கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • முன்விரோதம் காரணமாக நடைபெற்றது

    கரூர்:

    குளித்தலை அருகே உள்ள குப்புரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் மது விற்ற வழக்கில் சிறையில் இருந்துள்ளார். அவருக்கு கிருஷ்ணனின் அண்ணன் வேல்முருகன் ஜாமீன் கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குப்புரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த

    மோகன், தேவேந்திரன், பிரகாஷ், விஜயகாந்த் உள்ளிட்டோர் கிருஷ்ணனை தகாதவார்த்தைகளால் திட்டி கத்தியால் கிருஷ்ணனின் கண் புருவத்தின் மேல் குத்தியுள்ளனர்‌. பின்னர் வேல்முருகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது மனைவி கீதா மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் மோகன், தேவேந்திரன், பிரகாஷ், விஜயகாந்த் ஆகியோர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்."

    ×