search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4th Annual Festival"

    • லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி பெருமாள், கருட ஆழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
    • விசேஷ அலங்கார பூஜை, மஹா தீபாராதனையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    உடுமலை:

    உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம் அருகே செங்குளத்தின் கரையில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக நான்காவது ஆண்டு விழா வெங்கடேச பெருமாளின் அவதார உற்சவ விழாவாக இரண்டு நாட்கள் நடக்கிறது. இன்று வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த கோவில் வளாகத்தில் உள்ள சன்னதியில் உள்ள சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி பெருமாள், கருட ஆழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மாலை 5 மணி முதல் 7 மணி வரை பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு கள்ளப்பாளையம் சீனிவாச பெருமாள் பஜனை கோஷ்டியினரின் பஜனையும் பிருந்தாவனம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை கோவில் கும்பாபிஷேகம், நான்காம் ஆண்டு விழாவை ஒட்டி காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை ஹோமம் ,நவ கலசஸ்தாபிதம், வெங்கடேச பெருமாள், மூலவர் ,உற்சவர் திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.

    காலை 9.30 மணிக்கு புலவர் குரு சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய பெருமாள் திருமொழி நூல் வெளியீட்டு விழாவும், காலை 11 மணிக்கு விசேஷ அலங்கார பூஜை, மஹா தீபாராதனையும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவர் வழிபாடு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×