search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4th ODI"

    ஹாமில்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 92 ரன்களில் இந்திய அணியை சுருட்டியது. #NZvIND #TeamIndia
    ஹாமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

    இந்திய அணியைப் பொருத்தவரை எஞ்சிய இரு போட்டிகளும் சம்பிரதாய போட்டிகள்தான். எனவே, பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். தசைப்பிடிப்பால் கடந்த போட்டியில் பங்கேற்காத டோனி, இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சுப்மான் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர். ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13) இருவரையும் போல்ட் விரைவில் வெளியேற்றினார். இதையடுத்து அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் கிராண்ட்ஹோம் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின்னர் இளம் வீரர் சுப்மான் கில் 9 ரன்களும், கேதர் ஜாதவ் ஒரு ரன்னும் எடுத்த நிலையில், போல்ட்டிடம் விக்கெட்டை இழந்தனர். தேனீர் இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது இந்தியா.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியபோதும், பேட்ஸ்மேன்களால் களத்தில் நீடிக்க முடியவில்லை. விறுவிறுப்பாக 4 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்திக் பாண்டியா, 16 ரன்னுடன் நடையைக் கட்டினார். புவனேஸ்வர் குமார் 1 ரன், குல்தீப் யாதவ் 15 ரன்கள், அகமது 5 ரன்களில் ஆட்டமிழக்க, 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா, 92 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



    விராட் கோலி, டோனி இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர்  குப்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து நிகோலஸ்-கேன் வில்லியம்சன் ஜோடி விளையாடியது. #NZvIND #TeamIndia
    நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 33 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. #NZvIND
    ஹாமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

    பணிச்சுமை காரணமாக எஞ்சிய போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்றைய போட்டி 200-வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். தசைப்பிடிப்பால் கடந்த போட்டியில் பங்கேற்காத டோனி, இன்றைய போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் சுப்மான் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.



    துவக்க வீரர்களாக உற்சாகத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13) இருவரையும் போல்ட் விரைவில் வெளியேற்றினார். இதையடுத்து அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் கிராண்ட்ஹோம் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இளம் வீரர் சுப்மான் கில் 9 ரன்களே எடுத்த போல்ட் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். 33 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியது.

    இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ்,  சுப்மான் கில், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம்,  ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், கிராண்ட்ஹோம், டாட் ஆஸ்ட்லே, மேட் ஹெண்ட்ரி, டிரென்ட் போல்ட். #NZvIND

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடக்கிறது. #INDvWI #ViratKohli #MSDhoni #KedarJadhav
    மும்பை:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கவுகாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விசாகப்பட்டனத்தில் நடந்த 2-வது ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. புனேயில் நடந்த 3-வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற சமநிலை உள்ளது.

    இன்றைய 4-வது போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடுவதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    கடந்த போட்டியில் ஏற்பட்ட வெற்றியால் வெஸ்ட்இண்டீஸ் நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி இந்தியாவை வீழ்த்தி முன்னிலை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை மிகவும் மோசமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்திலாவது மிடில் ஆர்டர் வரிசை எழுச்சி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் 4 வரிசையில் இந்திய அணி நன்றாக இருக்கிறது. தொடக்க வீரர்களான ரோகித்சர்மா, தவான், விராட்கோலி, அம்பதி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் 5 முதல் 7-வது வரிசை தான் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த வரிசையின் சராசரி 28.68 ஆக இருக்கிறது.

    கடைசி 2 போட்டிக்கான இந்திய அணியில் கேதர்ஜாதவ் இடம் பெற்றுள்ளார். அவரது வருகையால் மிடில் ஆர்டர் வரிசை பலம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ரிசப்பண்ட் இடத்தில் கேதர்ஜாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மோசமான நிலையில் இருக்கும் டோனி சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார். அவர் நேற்று 45 நிமிடம் பயிற்சியில் ஈடுபட்டார். #INDvWI #ViratKohli #MSDhoni #KedarJadhav
    ×