search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "533 ATM Centre"

    • ஏ.டிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் ஏ.டிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து வட மாநிலத்தை சேர்ந்த ஒரு சிலரை போலீசார் கைது செய்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தமிழக முழுவதும் ஏ.டி.எம். மையங்களில் குற்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.  இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் நெய்வேலி ,சேத்தியாதோப்பு ,பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7உட்கோட்டங்களில் உள்ள 533 ஏ.டி.எம். மையங்களில் போலீசார் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


    அதன்படி அந்தந்த உட்கோட்டத்திற்குட்பட்ட போலீசார் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு தன்மையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு காவலர்கள் உள்ளாரா? எச்சரிக்கை அலாரம் சரியாக இயங்குகிறதா? கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? மின்விளக்கு வெளிச்சம்ஏ.டி.எம். மையங்களில் உள்ளே மற்றும் வெளியில் இருக்கிறதா? என்பதனை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஏ.டி.எம். மையம் பாதுகாப்பு குறித்து தற்போது உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் வங்கி மேலாளர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தி கடிதம் வழங்கப்பட்டது,,இதன் மூலம் வருங்காலங்களில்ஏ.டி.எம். மையங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்த நடவடிக்கை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×