search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "72 crore worth"

    • தொடர்ந்துகம்பி கட்டப்பட்டுகான்கிரீட் அமைக்கப்பட உள்ளது.
    • காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணியில்திருமூர்த்தி கோட்டத்திற்குட்பட்ட 5.26 கி.மீ., நீளம் உள்ள பகுதி விடுபட்டது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசனத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, சேகரித்து பரம்பிக்குளம் அணை மற்றும் சர்க்கார்பதி வழியாக திருமூர்த்தி அணைக்கு, காண்டூர் கால்வாய் வழியாக நீர் கொண்டு வரப்படுகிறது. இக்கால்வாய் மலைப்பகுதியில் 49.300 கி.மீ., தூரம் அமைந்துள்ளது. திட்டத்தின் ஆதாரமாக உள்ள இந்த சமமட்ட கால்வாய் முழுவதும் மலைப்பகுதியில்பல இடங்களில்சுரங்கம் அமைத்தும் கொண்டு வரப்படுகிறது.

    நீண்ட கால பயன்பாடு, மண் சரிவு, பாறைகள் விழுந்து பாதிப்பு என கரைகள் வலுவிழந்தது. இதனால்திட்ட தொகுப்பு அணைகளில் முழுமையான நீர் எடுக்க முடியாததோடு, நீர் இழப்பும் அதிகரித்து வந்தது.இதனையடுத்துகடந்த 2011ம் ஆண்டு முதல் 2015 வரை, 224 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாயில் முதல் கட்டமாக அதிக நீர் இழப்பு உள்ள பகுதிகளில் பணி மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் காண்டூர் கால்வாயில் கி.மீ., 30.100 முதல் 49.300 வரை, 5.26 கி.மீ., உள்ள பகுதி புதுப்பிக்கப்படாமல், கரைகள் சிதிலமடைந்து காணப்பட்டது.இப்பகுதிகளில்அடிக்கடி உடைப்பு, மண் சரிவு, நீர் இழப்பும் பெருமளவு காணப்பட்டது. எனவே கால்வாய் புதுப்பிக்கும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணியில் விடுபட்ட பகுதிகளை பலப்படுத்தும் வகையில், கடந்தாண்டு ரூ.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வந்ததால் இப்பணி துவங்க வில்லை.இந்நிலையில்முதலாம் மண்டல பாசனம், கடந்த மே 15-ந்தேதி நிறைவடைந்ததால் காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணிகள் துவங்கின. முதற்கட்டமாக, நல்லாறு அணை ஷட்டர் பகுதியில் கி.மீ., 34 மற்றும் 37 வது கி.மீ., பகுதிகளில் ஏறத்தாழ 4 கி.மீ., நீளம் கால்வாய் பகுதியில் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஏற்கனவே இருந்த கல், காரை கட்டுமானங்கள் முழுமையாக அகற்றப்பட்டு இரு புறமும் உள்ள பாறை, மண் ஆகியவை சரி செய்யப்படுகிறது.

    தொடர்ந்துகம்பி கட்டப்பட்டுகான்கிரீட் அமைக்கப்பட உள்ளது. இதனால் இப்பகுதியில் இனிமேல் நீர் இழப்பு தடுக்கப்படும். விடுபட்ட பகுதிகளில் 34 மற்றும் 37 வது கி.மீ., பகுதிகளில் மட்டும் பணி துவங்கியுள்ளது. நல்லாறு அணைக்கு மேல் கால்வாயின் 33 வது கி.மீ., பகுதியில் பணி துவங்க வேண்டியுள்ளது.நல்லாறு அணைக்கு கீழ் பகுதியில் இரு இடங்களில் துவக்கப்பட்ட பணிகளை, ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் நிறைவு செய்து, இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கவும், மீதமுள்ள பணிகளை, அடுத்தாண்டு துவக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து பி.ஏ.பி. அதிகாரிகள் கூறியதாவது:-

    காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணியில்திருமூர்த்தி கோட்டத்திற்குட்பட்ட 5.26 கி.மீ., நீளம் உள்ள பகுதி விடுபட்டது.கடந்தாண்டு நிதி பெறப்பட்டு டெண்டர் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்தது. பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வந்ததால் பணி துவங்கவில்லை.தற்போது முதல் மண்டல பாசனம் நிறைவு பெற்றதும், பணிகள் துவக்கப்பட்டுதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பருவ மழை மற்றும் அடுத்து துவங்க வேண்டிய இரண்டாம் மண்டல பாசனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இரு இடங்களில் மட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் இப்பணியை நிறைவு செய்து, அடுத்து பாசனத்தை துவக்கவும் நிலுவையில் உள்ள33 வது கி.மீ., பணியை இதே போல் அடுத்தாண்டு மே மாதம் துவக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×