search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 people killed"

    ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. #TitliCyclone
    ஐதராபாத்:

    வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது. நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.

    டிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகம் புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

    டிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. 

    இதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.



    மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சரிந்து கிடக்கின்றன.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்துவிட்டது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலுக்கு 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.

    இந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளில் சென்று அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #TitliCyclone 
    ×