search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "95th birthday celebration"

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா, மற்றும் வாழ்த்தரங்கம் திருவாரூர் அண்ணா திடலில் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ஒரே மேடையில் 23 தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா, மற்றும் வாழ்த்தரங்கம் திருவாரூர் அண்ணா திடலில் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    விழாவுக்கு பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேரூரை நிகழ்த்துகிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்கிறார்.

    இந்த விழாவில் ஒரே மேடையில் 23 தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைலர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீர பாண்டியன், இந்திய சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா சற்குணம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர்எர்ணாவூர் நாராயணன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், தேசிய லீக் தலைவர் பஷிர் அகமது, அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக்கை சேர்ந்த அம்மாவாசி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதய ராஜ் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இந்த விழாவின் மூலம் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேருகின்றன. இது பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக அமையும் என்று கருதப்படுகிறது. #DMK #Karunanidhi
    ×