என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 96 year old woman
நீங்கள் தேடியது "96 year old woman"
முதியோர் கல்வி திட்டத்தில் படித்து 96 வயதில் மூதாட்டி ஆர்வமுடன் தேர்வெழுதிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. #KarthiyaniAmma
திருவனந்தபுரம்:
கேரளாவில் முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ் படித்து வரும் முதியோருக்கு தேர்வுகள் நடந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் இத்தேர்வை 40 ஆயிரம் முதியோர் எழுதினர். இதில் செப்பேடு, கனிச்சநல்லூர், அரசு தொடக்கப்பள்ளியில் கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மூதாட்டி தேர்வு எழுதினார். இவர் தான் இத்தேர்வை எழுதியவர்களில் அதிக வயது உடையவர்.
வகுப்பறையில் கார்த்தியாயினி அம்மா தேர்வு எழுதிய போது அவருக்கருகில் ராமச்சந்திரன் என்ற 76 வயது முதியவர் இருந்தார். அவர் கார்த்தியாயினி அம்மாவின் விடைத்தாளை பார்த்து எழுதினார்.
இதனை தேர்வு கண்காணிப்பாளர் பார்த்து கண்டித்தார். அப்போது தான் கார்த்தியாயினி அம்மாவுக்கு 96 வயது ஆவதும், அவரை பார்த்து எழுதிய ராமச்சந்திரனுக்கு 76 வயது என்பதும் தெரிய வந்தது.
ராமச்சந்திரனை தேர்வு கண்காணிப்பாளர் கண்டித்ததை பார்த்து கார்த்தியாயினி அம்மாள் சிரித்தார்.
முதியோர் தேர்வில் முதலில் நடந்த புத்தகங்கள் படிக்கும் தேர்வு நடந்தது. இதில் கார்த்தியாயினி அம்மாவுக்கு 30க்கு 30 முழு மதிப்பெண் கிடைத்தது.
எழுத்து தேர்வில் கோடிட்ட இடங்களை நிரப்புவது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அவை படித்த பாடங்களில் இருந்து வரவில்லை, தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டதாக கார்த்தியாயினி அம்மா குறைப்பட்டுக்கொண்டார்.
96 வயதாகும் கார்த்தியாயினி அம்மா இதுவரை உடல் நலக்குறைவுக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. கண் பார்வை குறைபாடுக்காக ஆபரேஷன் செய்து கொள்ள மட்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
கார்த்தியாயினி அம்மா தினமும் 4 மணி நேரம் நடைபயிற்சி செய்கிறார். இளம் வயதுடையோர் நடப்பதை காட்டிலும் வேகமாக நடக்கிறார். இவரது ஆரோக்கியத்திற்கு இதுவே காரணம் என்றும் கூறுகிறார்.
இவரது மகள்கள் கோவில்களில் துப்புரவு பணி செய்து வருகிறார்கள். #KarthiyaniAmma

×

X