search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A stabbing"

    • இரண்டு குடும்பத்தினர் வேண்டுதல் முடித்து வாகனத்தில் கிளம்பும்போது உள்ளூரை சேர்ந்த ஒரு பெண் வாகனம் செல்ல வழிவிடவில்லை.
    • 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தூர் வீரனார் கோவிலில் வேண்டுதல் நிறைவேற்றி மனை பூஜை போடுவதற்காக முத்துப்பேட்டை மங்களூர் பகுதியில் இருந்து வந்த இரண்டு குடும்பத்தினர் வேண்டுதல் முடித்து மாலை 5 மணிக்கு வாகனத்தில் கிளம்பும்போது, உள்ளூரை சேர்ந்த ஒரு பெண் வாகனம் செல்ல வழிவிடவில்லை என சத்தம் போட்டுள்ளார்.

    அப்போது வாகனத்தில் இருந்தவர்களுக்கும் அங்கு நின்ற ஆலத்தார் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜதுரை (வயது35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (30) என்பவர்க ளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சத்தம் போட்டு உள்ளூர்கார ர்களை கூட்டிய ராஜதுரை, தேவேந்திரன் மற்றும் சிலர் ஓடிவந்து அரிவாளால் வெட்டியதில் முத்துப்பேட்டை மங்களூர் பகுதியில் இருந்து வந்திருந்த 2 குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ–க்கல்லூரி மருத்துவ–மனைக்கு கொண்டு செல்லபட்டனர்.

    ஆலத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் கத்தியால் குத்தியதில் அதிராம்பட்டினம் அருகே உள்ள மன்னங்காடு கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (32), முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (32), பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    அதே பகுதியை சேர்ந்த வீரையன் மகன் கோபி (27), மெய்யப்பன் மகன் கரன் (25), பெரியசாமி மகன் சரவணகுமார் (34) ஆகிய 5 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டதில் கார்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    கோவிலுக்கு வந்தவர்களிடம் தகராறு செய்து கத்தியால் குத்திய ராஜதுரை மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி வழக்கு பதிவு செய்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×