search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ACADEMY"

    • நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார்.
    • திரைப்படம் வெளியாகி குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன்.

    படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல பாராட்டு கிடைத்த நிலையில். திரைப்படம் வெளியாகி குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    மேலும் இப்படம் மகுடம் சூடும் வகையில் படத்தின் திரைக்கதையை லைப்ரரி ஆஃப் தி அகாடெமி ஆஃப் மோஷன் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ச்- இல் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த லைப்ரரியில் 1910 காலக்கட்டத்தில் இருந்து தற்பொழுது வரை வந்த வித்தியாசமான கதையை தேர்வு செய்து வைத்துள்ளனர், திரைத்துறை மாணவர்கள், எழுத்தாளர், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு இந்த திரைக்கதைகள் பரிந்துரையாக இருக்கும்.

    இதற்கு முன் ராம்குமார் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் அகாடெமி நூலகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண்
    • இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் கடந்த ஆண்டு வெளியாகிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய 'பார்க்கிங்' படத்தில் நடித்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை வாங்கியது பார்க்கிங் திரைப்படம்.

    திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்தார்.

    ஒரு ஐடி இளைஞனும், அரசாங்க ஊழியரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் இருப்பது ஒரே ஒரு பார்க்கிங் ஸ்லாட் மட்டும் தான். அதில் யார் காரை நிறுத்துவது என்பதை மையமாக வைத்து இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். ஒரு தனிமனித ஈகோ எந்த எல்லை வரைக்கும் செல்லும் என இப்படம் தெளிவாக காட்சி படுத்தி இருக்கும், படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார் ராம்குமார்.

    சமீபத்தில் படித்தின் ரீமேக் ரைட்ஸை 5 மொழிகளில் வாங்கினர். இந்நிலையில் படத்தின் திரைக்கதையை ஆஸ்கர் லைப்ரரி கோர் கல்க்ஷனில் இணைக்க படத்தின் தயாரிப்பாளரை கேட்டு அகாடமியில் இருந்து மெயிலை அனுப்பியுள்ளது, இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து பதிவை பதிவிட்டுள்ளார்.

    அதில் ஒரு நல்ல கதை அதுக்கான இடத்த தானே தேடி போகும் என்று நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 200 ஏக்கர் பரப்பளவில் அமையும் ஒலிம்பிக் அகாடமி அமைய உள்ளது.
    • திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் பகுதியில்

    திருச்சி:

    தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடந்த 29ம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1000 கோடிக்கு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது தமிழகத்தின் 4 மண்டலங்களில் அமைப்பதாக சட்டசபையில் அறிவித்த ஒலிம்பிக் அகாடமிகளில் ஒன்று திருச்சியில் அமைக்கப்படும் என அறிவித்தார். இது இங்குள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகளை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    இந்த புதிய ஒலிம்பிக் அகாடமி திருச்சி பஞ்சப்பூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 538 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் புதிய பஸ் முனையத்துக்கு 80 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சோலார் பிளான்டுக்கு 30 ஏக்கர் நிலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் மொத்தம் 200 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதம் 325 ஏக்கர் நிலம் உள்ளது.

    இதில் புதிய ஒலிம்பிக் அகாடமிக்கு 200 ஏக்கர் நிலத்தை ஒதுக்க நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.

    என். நேரு, கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்தியநாதன் ஆகியோரிடமும் தெரிவித்துள்ளனர்.

    ஒலிம்பிக் அகாடமி தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை மேயர் அன்பழகனும் இன்று உறுதி செய்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது,

    ஒலிம்பிக் அகாடமிக்கு பஞ்சப்பூர் உகந்த இடமாக உள்ளது. விமான நிலையமும் அருகாமையில் உள்ளது. சர்வதேச வீரர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். இந்த ஒலிம்பிக் அகாடமி விளையாட்டு வீரர்களுக்கு வரப் பிரசாதமாக இருக்கும் என்றார்.

    ×