search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident injury"

    • டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சவுந்தர்யா (வயது20 )என்ற கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உத்தரப்பள்ளி-தம்மாண்டரப்பள்ளி பஸ் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாது.

    இதில் கம்பைநல்லூரைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்திபன் (41), அவருடன் சென்ற உதவியாளர் சந்தியா (25), மூக்காண்டப்பள்ளியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பாபு ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    ஆம்புலன்சில் வந்த கர்ப்பிணி சவுந்தர்யாவுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்தவர்களை வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐதராபாத்:

    ஐதராபாத் மாநிலத்தில் சாலையோரத்தில் பைக் ஒன்று தீபற்றி எரிந்தது. தீப்பற்றி எரிந்த பைக்கை தண்ணீர் ஊற்றி அணைக்க அருகில் இருந்தவர்கள் போராடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பெட்ரோல் டேங்க் வெடித்ததால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த 8 பேரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல் டேங்க் வெடித்து 8 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
    • இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் பழனிச்சாமி (வயது 23). இவர் படித்து முடித்த பின்னர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது உறவினர் தம்பி பட்டியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் சக்தி (16). இவர் திருப்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து விட்டு பின்னர் கல்வியை தொடரவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு பழனிச்சாமி, இவரை அழைத்துக் கொண்டு, ஊர்குளத்தான் பட்டியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி நோக்கி தபால்துறைக்கு சொந்தமான அஞ்சலக வாகனம் சென்றது.

    அந்த வாகனம் மணமேல்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக இருவரையும் நெடுஞ்சாலைதுறை ரோந்து வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    ×