search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Credit Assistance"

    • விவசாயப் பெருங்குடி மக்களுக்கு விவசாய பயிர் செய்வதற்கு ஒரு வருட காலத்திற்குள் வட்டியில்லாமல் கடன்வசதி
    • கடந்த நிதியாண்டை விட அதிக கடனுதவி நடப்பு நிதியாண்டில் தரப்படுவதாக கூறினார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 3 பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான நோக்கம் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களுக்கு விவசாய பயிர் செய்வதற்கு ஒரு வருட காலத்திற்குள் வட்டியில்லாமல் திருப்பி செலுத்தும் வகையில் விவசாய பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கீழ்க்கண்ட கடன்கள் விவசாயிகள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    விவசாய பயிர்க்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23-ம் நிதியாண்டில் கூடுதலாக 8,673 உறுப்பினர்களுக்கு ரூ.51.66 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாய கூட்டு பொறுப்பு குழு கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 410 குழுக்களுக்கு ரூ.12.98 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கால்நடை பராமரிப்புக் கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 946 உறுப்பினர்களுக்கு ரூ.4.43 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மகளிர் சுய உதவிக்குழு கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 1,373 குழுக்களுக்கு ரூ.101 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நகைக்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 26,136 உறுப்பினர்களுக்கு ரூ.135.14 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 60 உறுப்பினர்களுக்கு ரூ.0.24 கோடி கடன் வழங்கப்ப ட்டுள்ளது.ஆலட்டி, ஜெடையலிங்கா, கடநாடு, கெந்தொரை, வீரபத்திரா மற்றும் தெங்குமரஹாடா ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முதன் முறையாக 2022-23 நிதியாண்டில் ரூ.2.11 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டு ள்ளது.கோத்தகிரி மற்றும் பந்தலூர் பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் முதன் முறையாக 2022-23 நிதியாண்டில் ரூ.0.43 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    13 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முதன் முறையாக 2022-23 நிதியாண்டில் ரூ.4.04 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×