search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arabian cuisine"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அரபு நாட்டு உணவுக்கு பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
    • அரபு நாட்டு உணவு வகைகளை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள கீழக்கரை என்றாலே பிரியாணியும் தொதலும் தான் நினைவுக்கு வரும். கீழக்கரை பிரியாணி சாப்பிடு வதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கீழக்கரைக்கு வருவதுண்டு,

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பிரியாணியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மந்தி, கப்சா போன்ற அரபுநாட்டு உணவு வகைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது,

    ராமநாதபுரம் மாவட்ட த்தை சேர்ந்த ஏராளமா னோர் வளைகுடா நாடு களில் வேலை செய்து வருகின்ற னர். விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பியவர்கள் கொ ரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் அரபு நாடு செல்ல விரும்பாமல் அரபு நாட்டு உணவகங்களை தொடங்கினர்.

    இங்கு தயாரிக்கப்படும் அரபுநாட்டு உணவு வகைகளை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வருகின்றனர். தினந்தோறும் தயாரிக்கப்படும் உணவு வகைகளை வாட்ஸ்அப் குரூப் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    இந்த உணவு வகைகள் பிரியாணி போன்று ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றில் தயாரிக்கப்படுகிறது. மசாலா எதுவும் பயன்படுத்தாமல் நெய், தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதன் ருசி நாவில் எச்சில் ஊற வைக்கிறது. இந்த வகை உணவு கீழக்கரையில் தொடங்கப்பட்டு தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பகுதிகளில் பரவியுள்ளது. இப்பகுதி மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்களில் அதிக கிராக்கி உள்ளது.

    8 பேர் சாப்பிடும் வகையிலான மட்டன் மந்தி ரூ. 2000, சிக்கன் மந்தி ரூ.1650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேவையானவர்களுக்கு வீடுகளுக்கு நேரடியாகச் சென்று உணவுகளை வழங்கி வருவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

    தற்போது பிரியாணி என்ற பெயர் மங்கிப்போய் மக்கள் மத்தியில் அரபு நாட்டு உணவு வகைகள் முதலிடத்தை பெற்றுள்ளது. உள்ளூரிலேயே வியாபாரம் செய்வதால் குடும்பம் சகித மாய் நிம்மதியுடன் இருந்து வருவதாக தெரிவித்தனர்.

    ×