search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army Exam"

    • ஏப்ரல் 16-ந் தேதி ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வுகள் (தொகுதி-1) நடத்தப்படுகிறது.
    • 162 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை,

    கோவையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வை 6 மையங்களில் 1,939 பேர் எழுத உள்ளனர் என்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏப்ரல் 16-ந் தேதி ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வுகள் (தொகுதி-1) நடத்தப்படுகிறது. இத்தேர்வை, கோவை மாவட்டத்தில் 6 மையங்களில் 1,939 பேர் எழுகின்றனர்.

    தேர்வைக் கண்காணிக்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில், துணை கலெக்டர் நிலையில் இரண்டு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வை யாளர்கள், தாசில்தார் நிலையில் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர், துணை தாசில்தார் நிலையில் 8 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 162 அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், தேர்வைப் பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் செயலர் நிலையில் ஒரு அலுவலரும் நியமிக்கப்பட் டுள்ளார். அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளைம், சூலூர் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ் வசதிகள் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன.

    தேர்வர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நுழைவு சீட்டுடன், தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசுகளால் வழங்கப் பட்டுள்ள அடையாள அட்டை (ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, கடவுச்சீட்டு),ஒரு கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×