search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aruppakottai"

    • போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்.
    • போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிகுமார். இவர் சரக்கு வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காளிகுமார் நேற்று அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காளிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    காளிகுமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அப்போது டிரைவர் காளிகுமாரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்றனர்.

    அப்போது கடும் கோபத்தில் இருந்த போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டக்குழுவில் இருந்த ஒரு சிலர் டி.எஸ்.பி. காயத்ரியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். இதில் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.

    அதன்பிறகு போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    அருப்புக்கோட்டை

    உலக யோகா தினத்தை முன்னிட்டு அருப்புக் க்கோட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்லூரியில் யோகா தினம் கொண்டா டப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு மன வளக்கலை மன்றத்தி னர் யோகா பயிற்சியை செய்து காட்டினர்.

    மாணவ-மாணவிகளும் இந்த பயிற்சியில் பங்கேற்ற னர்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர். முத்து தினகரன், முதல்வர் செல்லத்தாய், துணை முதல்வர் பால் ஜாக்குலின் பெரியநாயகம் மற்றும் மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த தலைவர் ஜோதிமணி, முத்து முருகன், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.

    • அருப்புக்கோட்டையில் கனமழை பெய்தது.
    • சுற்றுப்பகுதிகளில் 43 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.

    அருப்புக்கோட்டை

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் வெள்ளம் போல் காட்சி அளித்தது. மணி நகரம், ஓடை தெரு குடியிருப்பு பகுதியில் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கலந்து வெள்ளம் போல் அந்த பகுதியை சூழ்ந்தது. மழை காலங்களில் இந்த பகுதிகளில் சிறிய அளவிலான சாக்கடைகள் உள்ளதால் அந்த பகுதிக்கு வரும் மக்கள் வழி தெரியாமல் சாக்கடையில் விழுந்து விடுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தனர்.

    நேற்று பெய்த மழையில் அங்குள்ள சாக்கடையில் விழுந்த நபரை வாலிபர் காப்பாற்றினார். 20 வருடங்களுக்கு மேலாக ஓடைகளை தூர் வாராமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஓடைகளை தூர்வாரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 43 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.

    ×