search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMC"

    • மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டும்
    • மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மக்களை பாதிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    மாதத்திற்கு ஒரு முறை மின் பயன்பாட்டைக் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்நாளை காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது.

    • தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெரியார் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, தொகுதிக்குப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று மாம்பழம் சின்னத்தில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, இவர்களது மகள் சங்கமித்ரா ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி பெரியார் திடலில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்குகிறார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. அனைவரையும் வரவேற்று பேசுகிறார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ரவிபச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன்யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.

    தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பா.ம.க.வினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன்.
    • தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொடடி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

    நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பே ரவை தொகுதி பா.ம.க. வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்று வது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன்.

    வன்னியர்களுக்கு தமிழகத் தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ம் ஆண்டு நடந்த போது பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது.

    அப்போதும் கொலைப் பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தி யாகம் செய்தனர்.

    தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகு தியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பி னராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ம் நாள் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும்.

    இந்த தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தி.மு.க. அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் வன்னி யர்களுக்கான இட ஒதுக் கீட்டை வென்றெடுக்க விக்கி ரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
    • தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அ.தி.மு.க.வோ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக் கணிப்பதாக அதிரடி அறி விப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக" தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் இந்த முடிவால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. விலகி உள்ளதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. களத்தில் இல்லாத நிலையில் தி.மு.க.-பா.ம.க. இடையிலேயே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாரதீய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. வைத்துள்ள ரகசிய உடன்பாடு இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் இது மறைமுக ஆதரவு என்றும் அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கணிசமாக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் போட்டியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளதால் அது பா.ம.க.வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப் பதாகவே கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி போட்டியில் இருந்து விலகியுள்ள போதிலும் தி.மு.க. வை தோற்கடிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. நிச்சயம் உறுதியாக இருக்கும்.

    அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க.வினரின் செயல் பாடுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க., பா.ம.க. வேட்பா ளர்களோடு நாம் தமிழர் கட்சியின் அபிநயாவும் தனித்து போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ம.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் வழக்கம் போல கணிசமான ஓட்டுகளை வாங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 3 பேர் மட்டுமே களத்தில் நிற்பதால் நாம் தமிழர் கட்சி வேட்பா ளர் பிரிக்கும் ஓட்டுகளும் விக்கிரவாண்டி தொகுதி யில் முக்கியத்துவம் பெறும் என்றே எதிர்பார்க்கப்ப டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத ஓட்டுகளை வாங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்சி யாக மாறி இருக்கும் நாம் தமிழர் கட்சியும் விக்கிர வாண்டி தொகுதியில் உற்சாகமாக களம் இறங்கியுள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் அதிக வாக்குகளை நாங்கள் வாங்குவோம் என்று அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு, தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிக ஓட்டு கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெறுவோம் என்று தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு விக்கிரவாண்டி தொகுதியிலும் பெரிய வெற்றியை பெறுவதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. வேகம் காட்டி வருகிறது. அந்த கட்சி நிர்வாகிகளும் சுறுசுறுப்போடு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    பா.ம.க., நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது

    அதிமுக 8 தொகுதிகளிலும் பாமக 3 தொகுதிகளிலும் தேமுதிக 2 தொகுதிகளிலும் மட்டும் தான் அதிக வாக்கு வாங்கியுள்ளது.

    எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய 3 தொகுதிகளில் பாமக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    திருமங்கலம், அருப்புக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் தேமுதிக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

    4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள பாஜக 1 தொகுத்தியில் கூட அதிக வாக்குகளைப் பெறவில்லை.

    கோவை தெற்கு, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ உள்ள இந்த 4 இடங்களிலும் கூட பாஜகவால் அதிக வாக்குகள் பெற முடியவில்லை.

    பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்ள தொகுதியிலேயே பாஜக அதிக வாக்குகள் பெறாத நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என அக்கட்சியினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • முனியாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மூடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தலை வர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கட்சி யின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் நேர்மையான அரசியல் குறித்து விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுத் துக் கொண்டனர். இதற்கு ஒன்றிய பொருளாளர் ரேவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் செல்லம் பட்டி முருகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலா ளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், குரு பாலமுருகன், நிர்வாகிகள் நாராயணன், அமரன், முருகன், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காநல்லூர் முனி யாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் -பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ளது மேச்சேரி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் நுழைவுப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக சாக்கடை நீர் தேங்கி நின்றது. கனரக வாகனங்க ள்செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோரின் மீது சாக்கடை வாரி இறைக்கப்படுகிறது. இந்தநிலையில் பல்வேறு முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.மான கார்த்திக் போராட்டத்தை விளக்கிப் பேசினார், மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×