search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Sankalp"

    • பாரத் சங்கல்ப் யாத்ரா எனும் திட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • திட்டத்தின் மூலம் கிடைத்த நன்மைகளைப் பற்றி கூறினார்கள்.

    புதுச்சேரி:

    நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா எனும் திட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    அதன் ஒருபகுதியாக புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணவெளி தொகுதி டி.என்.பாளையம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சங்கல்ப் யாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    சங்கல்ப பிரசார வாகனத்தில் மத்திய அரசின் திட்ட செயல் விளக்க குறித்த வாகன நிறுத்தப்பட்டு மத்திய அரசு திட்டங்களை விளக்கப் பட்டது இதில் பிரதமரின் உரை, மத்திய அரசு திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் தங்கள் திட்டத்தின் மூலம் கிடைத்த நன்மைகளைப் பற்றி கூறினார்கள்.

    மேலும் கிராமத்தில் தேசிய அளவில் வெற்றி பெற்ற பல்வேறு துறை சேர்ந்த வீராங்கனைகள் வீரர்களை கவுரவிக்கப்பட்டது. ஜல்ஜீவன் திட்டம் மற்றும் எஸ்.பி.எம். திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட நடைபெற்ற திட்டத்தின் சான்றிதழ் அந்த கிராமத்தில் வியு.எஸ்.சி. குழுவின் மூலம் வழங்கப்பட்ட து. மேலும் பல துறைகள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் விடுபட்ட பயனாளிகளை சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    மேலும் பள்ளி வளாகத்தில் மருத்துவ பரிசோதனை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பிரசார வாகன யாத்திரையை தொடங்கி வைத்தார்.

    இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மாவட்ட கலெக்டர் வல்லவன், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

    இதில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் விமர்சை யாக கொண்டாடப்பட்டது.

    ×