search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CHARAL RAIN"

    • ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.
    • ரம்யமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    அதன்படி தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென்காசி மாவட்டத்திலும் அவ்வப்போது சாரல் மழை ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் மிதமாக விழுந்து வரும் நிலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • சாரல் மழையால் மக்களை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • குறிப்பிடத்தக்க மழை பெய்யாமல் உள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷம டைந்துள்ளனர்.

    கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த சில நாட் களுக்கு முன்பு மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், நேற்று மதியம் முதல் இரவு வரை மாவட்டம் முழுதும் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு, லேசான அளவில் சாரல் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, ஜில்லென்று காற்று மாவட்டம் முழுதும் வீசுவதால் அனைத்து தரப்பினர்களும் சந்தோஷமடைந்துள்ளனர்.

    மேலும், கருர் மாவட் டத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை யிலான காலக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க மழை பெய்யாமல் உள்ளது. எனவே, செப்டம்பர் மாதத்திலாவது அதிகளவு மழை கரூர் மாவட்டத்தில் பெய்ய வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×