search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cylinder price hike"

    • பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
    • 167-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை.

    எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சர்வசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகளை மாறியமைக்கும்.

    அந்த வகையில் செப்டம்பர் 1-ந்தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை மட்டும் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50ஆக நீடிக்கிறது.

    ஆனால், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855-க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் ரூ.7.50 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.38 உயர்ந்துள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னையில் தொடர்ந்து 167-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் தற்போது ரூ.35.50 காசு உயர்ந்துள்ளது. #CookingGas
    சென்னை:

    சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது.

    ஜூலை மாதம் 31-ந்தேதி வரை வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை ரூ.770.50 காசுகளாக இருந்தது. இந்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் ரூ.806 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்கள் ரூ.35.50 காசு உயர்ந்துள்ளது. இந்த மாதம் முதல் பதிவு செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மானிய தொகையாக சிலிண்டர் வழங்குவோரின் வங்கி கணக்கில் ரூ.319.58 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மானியம் இல்லாமல் வர்த்தக ரீதியில் விற்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1,427 ஆக இருந்தது. இந்த மாதம் முதல் ரூ.1468 ஆக உயர்ந்துள்ளது.

    இதன்மூலம் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.48 அதிகரித்து இருக்கிறது. இந்த விலை உயர்வுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. #CookingGas
    ×