search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Election Committee"

    • கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வந்துள்ள புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
    • வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியின் மாநில நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரம் பற்றி கேட்டறிகிறார்கள்.

    சென்னை:

    2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் 5 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அமைத்துள்ளார்.

    இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய தி.மு.க. தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது. கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வந்துள்ள புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள இருக்கிறது.

    ஏற்கனவே இளைஞரணி மாணவரணி, மகளிர் அணியுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ள இக்குழு இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளது.

    அப்போது வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியின் மாநில நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரம் பற்றி கேட்டறிகிறார்கள். அணிகளின் செயல்பாடு எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    ×