search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Daksana Mara Nadar Sangham"

    • சங்க ஆயுள்கால உறுப்பினர்கள், சமுதாய வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர்.
    • கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை தட்சண மாற நாடார் சங்கத்தின் 58-வது மகாசபை கூட்டம் தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் உள்ள டாக்டர். பா. சிவந்தி ஆதித்தனார் கூட்ட அரங்கில் சங்கத் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை யில் நடைபெற்றது. சங்க மூத்த நிர்வாகசபை இயக்குநர் பி.எஸ். கனிராஜ் நாடார் வரவேற்றார்.

    58-வது மகாசபை கூட்டம்

    58-வது மகாசபை கூட்டத்தின் ஆண்டறிக்கையை சங்கச் செயலாளர் டி.ராஜகுமார் நாடார் வாசித்தார். ஆண்டறிக்கையில் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் கல்வி ஸ்தாபனங்களின் வளர்ச்சி பணிகள் 2022 - 2023-ம் வருடத்தில் சங்கம் நிகழ்த்திய சாதனை விபரங்கள் மற்றும் சங்கத்தின் செயல்பாடு கள் குறித்து விபரங்கள் வாசித்து சமர்ப்பித்தனர்.

    அதைத்தொடர்ந்து 2022-2023-ம் வருடத்திற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்குகளை சங்கப் பொருளாளர் ஏ. செல்வராஜ் நாடார் வாசித்து விளக்கம் அளித்தார். பின்னர் கூட்டத்தில் மகாசபை கூட்ட ஆய்வுக்கான பொருட்கள் ஆய்வுக்கு விடப்பட்டு மகாசபை உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    சங்க ஆயுள்கால உறுப்பினர்கள், சமுதாய வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினர். புங்கம்பட்டியை சேர்ந்த மாடசாமி என்ற ஆயுள்கால உறுப்பினர் போலீஸ் நிலையங்களில் நாடார் சமுதாய இளைஞர்கள் மீது எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அதிக அளவில் வழக்குப்பதிவு செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    2 ஆயிரம் பேர் பங்கேற்பு

    கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்த தூத்துக்குடியை சேர்ந்த மாணவிக்கு கல்லூயில் 3 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான கல்லூரி மற்றும் பேராசிரி யர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அரசை கேட்டு க்கொள்ளப்பட்டது.

    கூட்டத்தில் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் காரியக்கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சப்-கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மும்பை கிளைச்சங்க சேர்மன் எம்.எஸ். காசிலிங்கம் நாடார், செயலாளர் டபிள்யூ. மைக்கிள் ஜார்ஜ் நாடார், சென்னை கிளை செயலாளர் எஸ். ராஜேந்திரன் நாடார், பொருளாளர் எம். ஜெகதீசன் நாடார் மற்றும் சங்க ஆயுள் கால உறுப்பினர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நெல்லை தட்சண மாற நாடார் சங்க துணைச் செயலாளர் வி.பி. ராமநாதன் நாடார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை காரியக்கமிட்டி உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார் தொகுத்து வழங்கினார்.

    ×