search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity interruption"

    • மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது
    • மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஒட்டன்சத்திரம், மினுக்கம்பட்டியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

    ஒட்டன்சத்திரம் :

    ஒட்டன்சத்திரம் துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட தழையூத்து மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்-பழனி சாலை, தென்றல்நகர், காந்திநகர், சோதனைச்சாவடி, உழவர்சந்தை, சம்சுதீன் காலனி, கருவூலக காலனி, அண்ணாநகர், தும்மிச்சம்பட்டிபுதூர், தழையூத்து பம்ப் ஹவுஸ் ஆகிய பகுதியில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    மினுக்கம்பட்டி

    இதேபோல் பராமரிப்பு பணிகள் காரணமாக மினுக்கம்பட்டி, அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, வி.புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், தேக்கம்பட்டி, தோப்புபட்டி, குன்னம்பட்டி, குட்டம், எஸ்.குட்டம், ஆசாரிபுதூர், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை(7-ந்தேதி) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என உதவிசெயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல் கீழ்மலையில் மலைக்கிராமங்களில் தொடந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்

    பெரும்பாறை :

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் குப்பம்மாள்பட்டி, வழிபொங்கல், ஏ.பி.நகர், கோரம்கொம்பு, வேங்கடி ஏற்றம், வெட்டுக்காடு, கள்ளக்கிணறு, கவியகாடு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த மலைக்கிரா–மங்களில் தொடந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் மலைக்கிராமங்கள் இரவில் இருளில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

    இதனால் இரவு நேரத்தில் வீட்டை, விட்டு பொதுமக்கள், விவசாயிகள் வெளியில் வரமுடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தாண்டிக்குடி துணை மின் நிலையத்துக்கு மலைக்கிராம மக்கள் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே மலைக்கிரா–மங்களில் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×