search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant Pagans going to Thailand for training"

    • நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன.
    • யானைகளை பராமரிக்கும், வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குறும்பர் போன்ற பழங்குடியின மக்களே மேற்கொள்கின்றனர்

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த யானை பாகன்கள் பயிற்சிக்காக தாய்லாந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் உள்ளன.

    அதே போல், இங்கு முகாம்கள் அமைக்கப்பட்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பல கும்கி யானைகள் இந்த முகாம்களில் உள்ளன.

    யானைகளை பராமரிக்கும், வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குறும்பர் போன்ற பழங்குடியின மக்களே மேற்கொள்கின்றனர். இவர்கள் தங்களுக்கு என்ற ஒரு யானையை தேர்வு செய்து, அதனை பிறந்தது முதல் கடைசி வரை பராமரித்து வருகின்றனர். இவர்களின் சொல்லுக்கே இந்த யானைகள் கட்டுப்படுகிறது. இவர்கள் அளிக்கும் உணவுகளையே அவைகள் உட்கொள்கின்றன. மேலும், யானை பாகன்கள் மற்றும் காவடிகள் என்ன சொல்கிறார்களோ அதற்கே அந்த காட்டு யானைகள் கட்டுப்படுகின்றன.

    முதுமலையில் உள்ள பல யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்தபோதிலும், இங்கு அவைகளுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இங்குள்ள பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு யானை வளர்ப்பில் பல புதிய யுக்திகளை கையாளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களுக்கு அங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 7 பாகன்களுக்கும். ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த பாகன்களுக்கும் தாய்லாந்து நாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இது தொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    யானைகளை பராமரிக்கும் பணிகளில் பழங்குடியின மக்களை சேர்ந்தவர்களே ஈடுபடுகின்றனர். இவர்களே பாகன்க ளாகவும், காவடிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் உள்ள யானை பாகன்கள் தேர்வு செய்யப்பட்டு தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கு அவர்களுக்கு யானைகள் வளர்ப்பது, பராமரிப்பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான செலவுகளை வனத்துறையே ஏற்கும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    ×