search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishermen village"

    மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்துக்களாக அறிவிக்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.#Fishermenvillage

    சென்னை:

    மீனவர்களை தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் வகுப்பில் சேர்த்து அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை தனி தொகுதியாக வரையறை செய்யவும், மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என்றும் மண்டல் கமி‌ஷன் கடந்த1980-ம் ஆண்டு பரிந்துரைத்துள்ளது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மீனவர் பாதுகாப்பு சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

    மண்டல் கமி‌ஷன் பரிந்துரைபடி மீனவ கிராமங்களை கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என கொடுத்த மனு மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை இல்லை என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    மேலும் அந்த மனுவில், தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. 9.24 லட்சம் மக்கள் தொகை உள்ளது.

    கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கும் நிதி மீனவ கிராமங்களுக்கு சென்றடையவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் வார்டு மறுவரையரை குழு உள்ளிட்டோர் ஆகஸ்டு 17-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #Fishermenvillage

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து 6 மீனவ கிராம மக்கள் இன்று காலை கோட்டக்குப்பம் ரவுண்டானா சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சேதராப்பட்டு:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில் போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இதில் நீதி விசாரணை நடத்த கோரியும் புதுவையை அடுத்த தமிழக பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமங்களான கோட்டக்குப்பம், தந்திராயன் குப்பம், நடுகுப்பம், பொம்மையார் பாளையம், முதலியார் சாவடி உள்ளிட்ட 6 மீனவ கிராம மக்கள் இன்று காலை கோட்டக்குப்பம் ரவுண்டானா சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கைகுழந்தைகளுடன் பங்கேற்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால், மீனவர்கள் அதனை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காலை 10 மணி முதல் 10.30 மணி வரை சுமார் 30 நிமிடம் வரை நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×