என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gandhi Temple"
- காமயகவுண்டன்பட்டி கிராம மக்கள் காந்திக்கு 1985-ம் ஆண்டு வெண்கலத்திலான முழு உருவ சிலையை அமைத்து அதற்கு கோவில் கட்டியுள்ளனர்.
- மகாத்மா காந்தியின் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
கம்பம்:
தேனிமாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டி கிராம மக்கள் சுதந்திர போரட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்களில் தங்களை அதிகளவில் ஈடுபடுத்தி கொண்டு காந்தியின் கொள்கைகளை பிரசாரம் செய்துள்ளனர்.
காந்தியின் கொள்கைகளையும், நடைமுறைகளையும் அடுத்து வரும் சந்ததியினரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, இக்கிராமத்தில் காந்திக்கு 1985-ம் ஆண்டு வெண்கலத்திலான முழு உருவ சிலையை அமைத்து அதற்கு கோவில் கட்டியுள்ளனர். இக்கோவிலை அப்போதைய துணை ஜனாதிபதியான வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.
கோவில் கட்டுமான பணிக்காக மக்கள் போட்டி போட்டு கொண்டு நன்கொடைகளை வாரி வழங்கி உள்ளனர். கோவிலில் காந்தி ஜெயந்தி, நாட்டின் முக்கிய தேசிய விழாக்கள், தேசிய தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து தேச பிதா காந்தியை கடவுளாக வழிபட்டு வருகின்றனர் கிராமமக்கள்.
இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இக்கோவிலில் காலை முதலே காந்தி சிலைக்கு மாலை அனிவித்து சிறப்பு பூஜைகள் செய்து ஏராளமான மக்கள் வழிபட்டு வருகின்றனர். மகாத்மா காந்தியின் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.