search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gayathri Manthiram"

    • அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    • அந்த வகையில் அவர்கள் ‘ராம’ நாமத்தினை பரிந்துரைக்கின்றார்.

    மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப் பிடிக்கப்படுகின்றன.

    * காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.

    * கிழக்கு முகமாக அமருங்கள்.

    * ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.

    * மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

    மகாத்மா காந்தி அவர்கள், அவர்களது 'இயற்கை வைத்தியம்' என்ற புத்தகத்தில் 'ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல.

    அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த வகையில் அவர்கள் 'ராம' நாமத்தினை பரிந்துரைக்கின்றார்.

    மேலும் 'ராம' நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார்.

    இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    'ரா' என்பது 'ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், 'ம' என்பது 'ஓம் நம சிவாய' என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால், இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

    கந்தர் சஷ்டி கவசத்தில் கூட 'ரஹன பவச ரரரர, ரிஹண பவச ரிரிரிரி' என சொல்லப்படுகின்றது.

    'ரா' என்ற எழுத்தும் 'ம' என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும், மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது.

    ஆக, மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.

    • 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.
    • 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

    * மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

    * ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

    * 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

    * 22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

    * 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

    * 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் 'க்ரே' பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

    * இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

    மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும், பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.

    • ஆனால், இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது.
    • கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

    டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார்.

    ஆனால், இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது.

    கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

    இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும், மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால், இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

    ஒரு மந்திரமோ, தியானமோ, யோகவோ, உடற்பயிற்சியோ ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.

    ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ-ம்) காபி, டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.

    த்யானமோ, மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர, பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.

    120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

    120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

    1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ, கடைப்பிடிக்கும் பழக்கமோ நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ-ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால், வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

    • நற்செயல்களில் ஈடுபடுவர்
    • காந்த சக்தி ஆகியவை உருவாகும்.

    * கம்பீரத் தோற்றம்

    * தரமான பேச்சு

    * வறுமை, குறை நீங்குதல்

    * பாதுகாப்பு வட்டம்

    * கண்ணில் அறிவு தெரிதல்

    * அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்

    * நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்

    மேலும்

    * அமைதியாய் இருப்பர்

    * நற்செயல்களில் ஈடுபடுவர்

    * காந்த சக்தி ஆகியவை உருவாகும்.

    மேலும்

    * வாழ்க்கையில் தடைகளை நீக்கும்

    * மூளையை பிரகாசிக்கச் செய்யும்

    * உள்ளுணர்வினை தெளி வாக்கும்

    * உயர் உண்மைகள் தெரிய வரும்

    - என்றும் கூறப்படுகின்றது.

    • சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது.
    • காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும்.

    இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது.

    சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது.

    மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது.

    வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள்.

    இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

    காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது.

    சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது.

    காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும்.

    காலை, மாலை இருவேளையும் சொல்லலாம்.

    அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும்.

    தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

    • வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
    • நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

    வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

    ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம்

    ப்பூ - உடல் விமானம்

    புவஹா - நிழலிடா விமானம்

    ஸ்வ - வான விமானம்

    தத் - அந்த தலை தெய்வத்தின்

    ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி

    வரேன்யம் - வணங்க வேண்டும்

    பர்கோ - பிரபல

    தேவஸ்ய - பிரகாசமிக்க

    தீமஹி - நம் த்யானம்

    தியோ - அறிவினை

    யா - யார்

    நஹ - எங்கள்

    ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள்

    ஓம் பூர் : புவ : ஸீவ :

    தத் ஸவிதுர் வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி

    தியோ : யோந: ப்ரசோதயாத்

    நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

    • இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது.
    • இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

    இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது.

    இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

    காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

    தத் - வெற்றி

    ச - வீரம்

    வி - பராமரிப்பு

    து - நன்மை

    வ - ஒற்றுமை

    ரி - அன்பு

    நி - பணம்

    யம் - அறிவு

    ஃபர் - பாதுகாப்பு

    க்கோ - ஞானம்

    த்தி - அழுத்தம்

    வா - பக்தி

    ஸ்யா - நினைவாற்றல்

    ஃத்தி - மூச்சு

    மா - சுய ஒழுக்கம்

    யோ- விழிப்புணர்வு

    யோ- உருவாக்குதல்

    நஹ- இனிமை

    பரா- நல்லது

    சோ- தைரியம்

    த்தா- ஞானம்

    யட் - சேவை

    • இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
    • பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, 'மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892&-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் 'நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் 'பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

    இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் 'காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் 'ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் 'யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக்கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் 'உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்' என்பதாகும்.

    • உள்ளம் தூய்மை அடையும் உள்ளுள் இருக்கும் ஆன்ம ஒளி காயத்ரியை ஜபிப்பவன் முகத்தில் ஞான ஒளியாக மலரும்.
    • நீண்ட ஆயுளும், காலத்தைக் கையாளும் திறனும் ஏற்படும்.

    நமது புராதன மந்திரங்களில் நேர்த்தியானதும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான மந்திரம் காயத்ரி மந்திரம்தான்.

    விவரிக்க முடியாத அளவிற்கு அதற்குள் சக்தி அடங்கியுள்ளது.

    நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மீக சக்தியைத் தட்டி எழுப்பக்கூடிய மந்திரமே காயத்ரி மந்திரம்.

    காயத்ரி மந்திர பொருள்:

    நம்முடைய புத்திகளை நல்லனவற்றைப் பற்றி நிற்குமாறு தூண்டுகின்ற (சூரிய மண்டலத்தில் உள்ள) ஒளிமயமான பகவானுடைய மங்கள ஸ்வரூபத்தை உபாசிக்கின்றேன்.

    ஜபம் செய்யும் போது மேற்கூறிய பொருளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

    அவரவர்களுடைய சக்தி நேரம் இவைகளுக்கு ஏற்றவாறு 1008, 108, 28 முறைகள் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

    மனதுக்குள்ளேயே மனனம் செய்து ஜபிப்பது ஒரு வகை.

    முணு முணுத்து ஜபிப்பது இரண்டாம் வகை.

    பிறர் காதில்படும்படி உயர்ந்த குரலில் ஜபிப்பது மூன்றாம் வகை.

    உயர்ந்த குரலில் ஜபிப்பதைவிட முணு முணுத்து ஜபிப்பது நூறுமடங்கு சிறந்தது.

    முணு முணுப்பைவிட மனத்தளவில் ஜபிப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது.

    காயத்ரி ஜபம் செய்யும்போது இரண்டு உள்ளங்கைகளையும் சிறிது வளைந்து முகத்துக்கு நேராக உயர்ந்து இருக்க வேண்டும்.

    விரல்கள் சேர்ந்திருக்கக் கூடாது.

    ஜபகாலத்தில் காயத்ரியை எண்ணும் போது சுண்டு விரலின் அடிப்பாகத்தில் உள்ள கணுவிலிருந்து பிரதக்சினமாக மோதிரவிரலின் அடிப்பாகத்திலுள்ள கணுவரை எண்ண வேண்டும்.

    இப்படி எண்ணினால் பத்து எண்களாகும்.

    அக்சமாலை முதலியவற்றைக் கொண்டு எண்ணக்கூடாது.

    ஓம், பூர் புவஸ்ஸூவ

    தத்ஸவி துர்வ ரேணியம்,

    பர்க்கோ தேவஸ்ய தீமஹி, தியோயோ ந பிரசோதயாத்

    என்று ஐந்து பகுதிகளாக நிறுத்தி ஜபிக்க வேண்டும்.

    தூணிலோ சுவரிலோ சாய்ந்திராமல் நேராக உட்காந்து ஜபிக்க வேண்டும்.

    இரண்டு கைகளையும் வஸ்திரத்தினால் மூடிக் கொண்டு ஜபிக்க வேண்டும்.

    பூஜை அறையில் இறைவனுக்கு முன் உட்கார்ந்து உச்சரிப்பது மிகச் சிறந்தது.

    இந்த மத்திரத்தை சொல்வதால், உயிர் வலிமை பெறும்.

    உடலில் சக்தி அதிகமாகும். பகைவர்களை வெல்லும் திறமை ஏற்படும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

    உள்ளம் தூய்மை அடையும் உள்ளுள் இருக்கும் ஆன்ம ஒளி காயத்ரியை ஜபிப்பவன் முகத்தில் ஞான ஒளியாக மலரும்.

    நீண்ட ஆயுளும், காலத்தைக் கையாளும் திறனும் ஏற்படும்.

    காயத்ரி மந்திரம் உலகத்துக்கே பொதுவானது.

    இது பரம்பொருளை தியானிக்கச் சொல்கிறது. எந்தக் கடவுளையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

    எனவே நாடு, மொழி, இனம் மதம், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரும் இதனை ஜபிக்கலாம்.   

    • இதை எல்லோரும் படித்தால் மிகவும் நல்லது
    • நல்ல மழை பொழிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கள்

    01. சொர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி

    ஓம் பைரவாய வித்மஹே

    ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி

    தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்

    02. காலபைரவர் காயத்ரி

    ஓம் காலத் வஜாய வித்மஹே

    சூல ஹஸ்தாய தீமஹி

    தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

    23. சூரிய காயத்ரி

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

    பாச ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

    24. சந்திர காயத்ரி

    ஓம் பத்மத்வஜாய வித்மஹே

    ஹேம ரூபாய தீமஹி

    தந்நோ சந்திர ப்ரசோதயாத்

    25. அங்காரக காயத்ரி

    ஓம் வீரத்வஜாய வித்மஹே

    விக்ன ஹஸ்தாய தீமஹி

    தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

    26. புதன் காயத்ரி

    ஓம் கஜத் வஜாய வித்மஹே

    சுக ஹஸ்தாய தீமஹி

    தந்நோ புதப் ப்ரசோதயாத்

    27. குரு காயத்ரி

    ஓம் விருஷபத்வஜாய வித்மஹே

    க்ருணி ஹஸ்தாய தீமஹி

    தந்நோ குருப் ப்ரசோதயாத்

    28. சுக்ர காயத்ரி

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

    தனுர் ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

    29. சனி காயத்ரி

    ஓம் காகத் வஜாய வித்மஹே

    கட்க ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சனிப் ப்ரசோதயாத்

    30. ராகு காயத்ரி

    ஓம் நாகத்வஜாய வித்மஹே

    பத்ம ஹஸ்தாய தீமஹி

    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    31. கேது காயத்ரி

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

    சூல ஹஸ்தாய தீமஹி

    தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

    32. நவகிரக சாந்தி ஸ்லோகம்

    ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச

    குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

    33. வருண காயத்ரி

    ஓம் ஜலபிம்பாய வித்மஹி

    நீல் புருஷாய தீமஹி

    தன்னோ வருணப் ப்ரசோதயாத்

    இதை எல்லோரும் படித்தால் மிகவும் நல்லது; நல்ல மழை பொழிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கள்...

    34. ஸ்ரீஅன்னபூரணி (என்றும் உணவு கிடைக்க)

    ஓம் பகவத்யை வித்மஹே

    மாஹேச்வர்யை தீமஹி

    தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

    35. குபேரன்

    ஓம் யட்சராஜாய வித்மஹே

    வைச்ரவணாய தீமஹி

    தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்.

    • காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது.
    • விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

    ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்

    காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது.

    விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

    1. விநாயகர் காயத்ரி

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    வக்ர துண்டாய தீமஹி

    தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

    2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    மஹா சேநாய தீமஹி

    தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

    3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    மஹாதேவாய தீமஹி

    தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

    4. ஸ்ரீ லட்சுமி காயத்ரி

    ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே

    விஷ்ணு பத்ந்யைச தீமஹி

    தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

    5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி

    ஓம் வாக்தேவ்யைச வித்மஹே

    விரிஞ்சி பத்ந்யைச தீமஹி

    தந்நோ வாணி: ப்ரசோதயாத்

    6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி

    ஓம் காத்யாயனாய வித்மஹே

    கன்யா குமரீச தீமஹி

    தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

    7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி

    ஓம் தாமோதராய வித்மஹே

    ருக்மணி வல்லபாய தீமஹி

    தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

    8. ஸ்ரீ ராமர் காயத்ரி*

    ஓம் தசரதாய வித்மஹே

    சீதா வல்லபாய தீமஹி

    தந்நோ ராம: ப்ரசோதயாத்

    9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி

    ஓம் நாரயணாய வித்மஹே

    வாசுதேவாய தீமஹி

    தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

    10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி

    ஓம் வஜ்ர நாகாய வித்மஹே

    தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

    தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

    11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி

    ஓம் பூத நாதாய வித்மஹே

    பவ நந்தனாய தீமஹி

    தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்

    12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி

    ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே

    வாயு புத்ராய தீமஹி

    தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

    13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

    ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே

    விஷ்ணு தல்பாய தீமஹி

    தந்நோ நாக ப்ரசோதயாத்

    14. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் காயத்ரி

    ஓம் வாகீஸ்வராய வித்மஹே

    ஹயக்ரீவாய தீமஹி

    தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

    15. ஸ்ரீநிவாசர் காயத்ரி

    ஓம் நிரஞ்சனாய வித்மஹே

    நிராபாஸாய தீமஹி

    தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

    16. ஸ்ரீ கருட காயத்ரி

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    ஸ்வர்ண பட்சாய தீமஹி

    தந்நோ கருட ப்ரசோதயாத்

    17. நந்தீஸ்வரர் காயத்ரி

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    சக்ர துண்டாய தீமஹி

    தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

    18. ஸ்ரீ தட்சிணாமூர்த்தி காயத்ரி

    ஓம் தட்சிணாமூர்த்தியைச வித்மஹே

    தியான ஹஸ்தாய தீமஹி

    தந்நோ தீசப் ப்ரசோதயாத்

    19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி

    ஓம் வேதாத்மனாய வித்மஹே

    ஹிரண்ய கர்ப்பாய தீமஹி

    தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

    20. ஸ்ரீ காளி காயத்ரி

    ஓம் காளிகாயைச வித்மஹே

    சமசான வாசின்யை தீமஹி

    தந்நோ அகோர ப்ரசோதயாத்

    ×