என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » HP encounter
நீங்கள் தேடியது "HP encounter"
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, இமாச்சல பிரதேசத்தில் நடந்த சண்டையின்போது போலீசார் சுட்டுக்கொன்றனர். #HPEncounter #WantedCriminalKilled
சிம்லா:
பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கும்பல், நேற்று காரில் வந்தவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கார் திருடர்களை துரத்திச் சென்றனர். அண்டை மாநிலமான இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்ட எல்லைக்குள் கார் திருடர்கள் தப்பிச் சென்றனர்.
தொடர்ந்து துரத்திய பஞ்சாப் போலீசார் இன்று அதிகாலை நைனா தேவி பகுதியில் அவர்களை நெருங்கியபோது, ஒரு திருடன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதையடுத்து போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தி திருடர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் பலத்த காயமடைந்த மற்றொருவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துபோனான். இறந்தவன் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சன்னி மாசிஹ் என்பதும், பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. இதேபோல் மற்றவர்கள் மீதும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது. #HPEncounter #WantedCriminalKilled

×

X