search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holy Sandhyakapar"

    • தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலையில் மறையுறை, மாலை ஆராதனையும் நடைபெற்றது.
    • 10-ம் திருவிழா காலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி மரிய அரசு, விஸ்வாசம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேர்ந்த பூமங்கலம் பங்கு தந்தை செல்வன் பெர்னான்டோ, புன்னக்காயல் பங்கு தந்தை பிராங்கிளின் பெர்னான்டோ ஆகியோர் கலந்துகொண்டு கொடி யேற்றி, சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலையில் மறையுறை, மாலை ஆராதனையும் நடைபெற்றது.

    9-ம் திருவிழா அன்று மாலை ஆராதனை நடந்தது. இதனை ரவீந்திரநாத் அடிகளார், சில்வர்ஸ்டர் மஸ்காராஸ் ஆகியோர் நடத்தினர். தொடா்ந்து இரவில் சப்பர பவனி நடந்தது.

    10-ம் திருவிழா காலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி மரிய அரசு, விஸ்வாசம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×