search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In Koolamet"

    • ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் இன்று காலை பொங்கல் பண்டிகை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
    • பல்வேறு ஊர்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் விடப்பட்டது. இந்த காளை களை அடக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் இன்று காலை பொங்கல் பண்டிகை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல், கரூர்,கள்ளக்குறிச்சி பெரம்பலூர்,உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் விடப்பட்டது. இந்த காளை களை அடக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கிவைத்தார். போட்டியை திரளானோர் பார்த்தனர். முன்னதாக எருதுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதன் பிறகே எருதுகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

    இந்தாண்டு முதன்முறை யாக ஜல்லிக்கட்டு போட்டியை காண பொது மக்களிடம் ரூ 300 பெற்றுக் கொண்டு காலரியில் அமர்ந்து பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

    மற்ற பொதுமக்கள் ஓரமாக நின்று ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை கூலமேடு, ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.

    ×