search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel airstrikes"

    • பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
    • வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    ஜெனின்:

    பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் படையினர் கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை நகரமான ஜெனினில் உள்ள ஒரு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

    மேலும் அந்த வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
    • ரஃபா நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.

    காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் அடங்குவார்கள். ஒரு குழந்தை பிறந்து ஐந்தே நாட்கள் ஆன நிலையில் உயிரிழந்துள்ளது.

    எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதனால் ரஃபா மீது தரை தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறது. ரஃபா நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.

    காசா முனையில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபா நகருக்கு குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். மனிதாபிமான பேரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சவுதி அரேபியா சென்றுள்ளனர். இவர் இஸ்ரேல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவிற்கு மேலும் உதவிப் பொருட்கள் சென்றடைய இஸ்ரேல் வழிவகை செய்ய வேண்டும். இருந்தபோதுிலும், மனிதாபிமான நெருக்கடியை தணிக்க இரு தரப்பிலும் போர் நிறுத்தம் செய்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

    • சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியாவின் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

    சிரியாவின் சனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், எதிரி நாடான இஸ்ரேல் வான்வழியே நடத்திய ஏவுகணை தாக்குதல் டமாஸ்கஸ் நகரில் சில பகுதிகளை இலக்காக கொண்டிருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் வான்வழி நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொருட்களும் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×