search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel Embassy"

    • தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
    • நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    செர்பியா நாட்டு தலைநகர் பெல்கிரேடில் இஸ்ரேல் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றார். அங்கிருந்த போலீஸ்காரர் மீது அம்பை எய்தாா். இதில் கழுத்தில் அம்பு பாய்ந்து காவலா் காயமடைந்தாா். உடனே போலீஸ்காரர் தற்காப்புக்காக அம்பு வைத்திருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில் அந்த நபா் உயிரிழந்தாா்.

    தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுடன் சொ்பியா நட்புறவை பேணி வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் கூறும்போது, `இது கொடூரமான பயங்கரவாத செயல். இது எந்த மதத்திற்கும் எந்த தேசத்திற்கும் காரணமாக இருக்க முடியாது. இது ஒரு தனிநபரின் குற்றம்' என்றார்.

    இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, `செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ளது மற்றும் தூதரகத்தின் எந்த ஊழியரும் காயமடையவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

    • இஸ்ரேல் தூதரகம் முன் பாதுகாப்பு பணியில் இருந்து வீரர் மீது தாக்குதல்.
    • தன்னை பாதுகாத்துக் கொள்ள அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மர்ம நபர் உயிரிழப்பு.

    செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அதிகாரியின் கழுத்தில் இரும்பு போல்ட் (Bolt) ஆல் பயங்கரமாக தாக்கினார்.

    இதனால் அந்த அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். கழுத்தில் காயம் அடைந்த அதிகாரி, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான மர்ம நபரை துபாக்கியால் சுட்டார். இதில் அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதற்கிடையே காயம் அடைந்த அதிகாரி மயக்கம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆபரேசன் செய்து போல்ட் நீக்கப்பட்டது.

    தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் கானும் பணி நடைபெற்று வருவதாகவும், தாக்குதல் நடத்துவதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் செர்பியா உள்துறை மந்திரி இவிகா டேசிக் தெரிவித்துள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உடனான நெருக்கமான உறவை செர்பில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவ இடத்தில் காவல் துறை விசாரணை.
    • காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் அதிபயங்கர சத்தம் கேட்டதாக டெல்லி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தொலைபேசியில் கிடைத்த தகவலை வைத்து சம்பவ இடத்திற்கு காவல் துறை விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டது.

    மேலும் தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். எனினும், அந்த பகுதியில் இருந்து அத்தகைய சத்தம் வந்ததற்கான ஆதாரம் எதுவும் காவல் துறைக்கு கிடைக்கவில்லை.

    இன்று மாலை 5 மணி அளவில் தூதரகம் அருகில் குண்டு வெடிப்புக்கு இணையான அளவு அதிபயங்கரமான சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    ×