search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabadi championship"

    • பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் கபடி அணி மற்றும் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு பெற்ற அணி பங்கேற்கலாம்.
    • மாவட்ட சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பெண்கள் அணிக்கானவர் தேர்வு செய்யப்படுவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி காங்கயம் ரோடு மாவட்ட கபடி கழக மைதானத்தில் வரும் 30-ந்தேதி நடக்கிறது.இதில், பள்ளி, கல்லூரிகளின் பெண்கள் கபடி அணி மற்றும் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு பெற்ற அணி பங்கேற்கலாம்.

    போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணம் இல்லை.போட்டி காலை 9:30க்கு துவங்கும்.9 மணிக்கு முன் வரும் அணிகளுக்கு காலை உணவு பயண செலவுக்கு அணிக்கு, 500 ரூபாய் தரப்படும்.போட்டியில் பங்கேற்று விளையாடும் அணிகளில் இருந்து, மாவட்ட சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பெண்கள் அணிக்கானவர் தேர்வு செய்யப்படுவர். சீனியர் - வயது வரம்பு இல்லை. எடை 75 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.ஜூனியர் -2002 செப்டம்பர் 4ந் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். 65 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.சப் - ஜூனியர் 2006, செப்டம்பர் 4ந் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். எடை 55 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.மாநில ஜூனியர் கபடி போட்டி திருவள்ளூரில் ஆகஸ்டு 5 முதல் 7 வரை 3 நாட்கள் நடக்கிறது. மாவட்ட அணியில் தேர்வாகும் வீராங்கனைகள் மாவட்ட போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

    பள்ளி, கல்லூரிகள், மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவன அதிகாரியின் ஒப்புதலோடு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    ×