search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanimozhi mp"

    • மசோதா அடிப்படையிலேயே அரசியலமைப்பு சட்டத்திற்கு, மாநில உரிமைகளுக்கு, மக்கள் உரிமைகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.
    • மாநில கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்யக் கூடிய தேர்தலை நோக்கிதான் இந்த சட்ட மசோதா நம்மை அழைத்துச் செல்லும்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத நிலையில் மசோதாவை தாக்கல் செய்ததற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்துள்ள மசோதாவை இன்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. மசோதாவை நிறைவேற்றுவதற்கான மெஜாரிட்டி அவர்களிடம் இல்லாத காரணத்தினால் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    இந்த மசோதா அடிப்படையிலேயே அரசியலமைப்பு சட்டத்திற்கு, மாநில உரிமைகளுக்கு, மக்கள் உரிமைகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது. மாநில கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்யக் கூடிய தேர்தலை நோக்கிதான் இந்த சட்ட மசோதா நம்மை அழைத்துச் செல்லும். அதையும் தாண்டி ஜனாதிபதி ஆட்சிக்குதான் வழிவகுக்கும். அடுத்த கட்டம் அங்கு நோக்குதான் நிற்கும். இந்த மசோதா அதிபர் ஆட்சி முறையை நோக்கி கொண்டு செல்லும்.

    மாநில சுயாட்சி மற்றும் உரிமைகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள மசோதா. இந்த மசோதாவை கொண்டு வருவதால் தேர்தல் செலவு குறையும் எனக் கூறுகிறார்கள். ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியவில்லை. ஆறு முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதனால் மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான லாஜிஸ்டிக் மற்றும் தேர்தல் அதிகாரிகள் எங்கிருந்து உருவாக்கப்படுவார்கள் போன்றவை குறித்து ஏராளமான கேள்விகள் உள்ளன. இதனால் தேவையில்லாத ஒரு சுமையை அரசு மீதும், தேர்தல் ஆணையம் மீதும் ஏற்றக்கூடியதாக இருக்கும்.

    மெஜாரிட்டில் இல்லாமல் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு காரணம் மக்களை திசை திருப்புவதற்காக இருக்கலாம். அல்லது தன்னால் விரும்பிய அனைத்தும் சாதித்து விடலாம் என்ற மனநிலையில் கொண்டு வரப்பட்டதாக கூட இருக்கலாம்.

    தி.மு.க.-வினர் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த மசோதாவை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். எதிர்ப்போம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை அடிப்படையிலேயே எதிர்க்கிறோம்.

    பாராளுமன்ற கூட்டுக்குழுவில் எப்படிப்பட்ட மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்பது குழு அமைத்த பின்னர்தான் தெரியும். பாராளுமன்ற கூட்டுக்குழுவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் இல்லை என்பது மாற்றப்பட்டால் மசோதாவை ஏற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கும் காரணத்திலேனாலேயே நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம்.
    • எங்கள் அண்டை மாநிலமாக கேரளாவிற்கு இதே பிரச்சனை தான்

    மத்திய அரசு, கேரளாவுக்கு ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதி வழங்காமல் கையை விரித்துவிட்டது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

    இன்று மக்களவை பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "2014 முதல் 2020 வரை வெப்ப அலையால் இந்தியாவில் 5000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலையை மாநில பேரிடராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

    மத்திய அரசு வழங்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் 30% நிதி மக்கள் தொகை மற்றும் மாநில பரப்பளவு அடைப்படையில் வழங்கப்படுகிறது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த தமிழ்நாடு அரசிற்கு இந்த விதிமுறைகள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

    இது நன்றாக படித்து நிறைய மதிப்பெண் வாங்கிய மாணவரை வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைப்பதற்கு சமம். தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கும் காரணத்திலேனாலேயே நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம். எங்கள் அண்டை மாநிலமாக கேரளாவிற்கு இதே பிரச்சனை தான்" என்று தெரிவித்தார்.

    அப்போது கேரளாவை சேர்ந்த பாஜகவின் ஒரே ஒரு எம்.பி.யான சுரேஷ் கோபி கையை விரித்து காண்பித்தார்.

    அதற்கு பதில் அளித்த கனிமொழி, "நீங்கள் கையை விரித்து காட்டுகிறீர்கள். அதே நிலைமைதான் கையை விரித்து விட்டார்கள். மத்திய அரசு நம்மை பார்த்து கைய விரிச்சிட்டாங்க" என்று தெரிவித்தார்.

    • டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என்றார்.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அப்போது, சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என்றார்.

    இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என முதல்வரின் நிலைப்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    இந்த விவகாரத்தில் தற்போது மக்களோடு நிற்பது போல் நாடகமாடும் அதிமுக, நாடாளுமன்றத்தில் "சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா 2023" -க்கு ஆதரவளித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் அதிமுக - வின் இரட்டை வேடம் மக்களிடத்தில் அம்பலமாகியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
    • மூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய அவர், "இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது. அங்கு தான் அரசு அப்படி இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது?

    இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லையே. இதையெல்லாம் இன்று அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் வேங்கைவயல் சம்பவம் குறித்து விஜய் பேசியது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "மணிப்பூரையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது என்பது, அரசியலில் மேடையேறி விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுபோல் உள்ளது. மணிப்பூரில் உள்ள பிரச்சனைகள் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது பாஜக மணிப்பூருக்கு சென்று நியாயம் வழங்காமல் இருப்பதை விட இது மோசமானது" என்று தெரிவித்தார்.

    • தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதய குமார் மற்றும் உயிரிழந்தார்.
    • உயிரிழந்த பாகனின் மனைவியிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சேகர்பாபு வழங்கினார்.

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி தெய்வானை யானை தாக்கியதில் யானை பாகன் உதய குமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் இறந்தனர்.

    பின்னர் யானை பாகன் உதயகுமார் வீட்டிற்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவரது மனைவி ரம்யாவிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், கோவில் நிதியிலிருந்து ரூ. 5 லட்சம், தக்கார் அருள் முருகன் சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    இதனையடுத்து யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவரது குழந்தைகள் படிப்புச் செலவை இந்த தொகுதி அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை திமுக எம்.பி. கனிமொழி இன்று வழங்கினார். 

    • மக்கள் விரோத ஆட்சியாளர்கள் இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடுவதாக விஜய் விமர்சனம்
    • 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என்று நானும் இறுமாப்போடு சொல்கிறேன் என்று எம்.பி. கனிமொழி பதிலடி

    சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய அவர், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், திமுகவை விமர்சித்து விஜய் பேசியதற்கு எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்.பி. கனிமொழி, "ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து செயல்படக்கூடிய ஒரு ஆட்சி நம் ஆட்சி தான். வாய் சவடால் எல்லாம் நிறைய வரலாம். இந்த மாதிரி பேசியவர்கள் எல்லாம் ஒன்றுமே செய்து காட்டியதில்லை. அண்ணன் தளபதி சொல்வது போல 200 தொகுதிகளில் திமுக வெல்லும் என்று நானும் இறுமாப்போடு சொல்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது.
    • உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங்குக்கு நன்றி.

    சென்னை, நவ.29-

    தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடிதம் வழங்கியிருந்தேன்.

    எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங்குக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரை மீட்க கோரிக்கை.
    • குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை.

    திமுக எம்.பி கனிமொழி இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

    அப்போது, லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரையும், குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி கடிதம் ஒன்றை வழங்கிானர்.

    இதுகுறித்து, கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம்

    சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள்.

    ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம்.

    ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, கனிமொழி 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

    தமிழ்நாட்டின் கலாசார திருவிழாவான பொங்கல் அன்று சி.ஏ. முதல்நிலை தேர்வுகளை நடத்தும் ஐ.சி.ஏ.ஐ.ன் (ICIA) முடிவு, நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். தமிழ் மரபுகள் மற்றும் பிராந்திய சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தை இந்த உணர்வில்லாத செயல் பிரதிபலிக்கிறது. தேர்வு தேதியை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    மத்திய அரசு தமிழர் உணர்வுகளை உண்மையாக மதிக்கும் பட்சத்தில், தேர்வு தேதியை மாற்றியமைக்க ஐ.சி.ஐ.ஏ.வை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். நமது கலாசார பன்முகத்தன்மையை குலைக்கும் செயல்களை நிறுத்திவிட்டு, பெரும்பான்மையான தமிழர் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டிய நேரம் இது.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • அதிகவிற்கு வேறு வேலை என்பதால் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.
    • நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.

    வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுகவிற்கு வனவாசம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-

    ஜெயக்குமாருக்கு வேறு வேலைக்கு போக முடியவில்லை என்பதாலும், அதிமுகவிற்கு வேறு வேலை என்பதாலும் பகுதி நேரமாக ஆருடம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.

    அவ்வாறு பார்க்கக்கூடியவர்கள் இப்படி பேசவும் செய்வார்கள். ஒரு பயத்தில் இருந்து வரக்கூடிய கருத்துகள்தான் இது.

    நாடாளுமன்ற கூட்டத் தொடரில், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. என்னென்ன பிரச்சினைகள் குறித்து பேசப்படும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படியும், அங்கு இருக்கக்கூடிய மற்ற கட்சிகளிடமும் கலந்து பேசிதான் முடிவு எடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மெரினா கடற்கரையில் 15 லட்சம் மக்கள் கூடியதால் கடுமையான போக்குவரத்து.
    • கூட்ட நெரிசல், வெப்பம் காரணமாக ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ராணுவ விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அதைபோல் கடற்கரையிலும் கூட்டம் அலைமோதியது.

    கடுமையான வெயில் மற்றும் கூட்டம் நெரிசல் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிப்பதாவது:-

    சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. குற்றிப்பிட்டுள்ளார்.

    பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

    ×