search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laika"

    • கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.
    • வழக்குகள் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தன.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், 'விஷால் பிலிம் பேக்டரி" பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.

    அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயைத் தான் செலுத்தி உள்ளதாக விஷால் கூறியுள்ளார். மேலும் லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்பிருப்பதால், தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்' என விஷால் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பக்கோரி லைகா நிறுவனம் சார்பிலும் தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தன.

    அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை தொடர்பாக நடிகர் விஷால் மற்றும் லைகா நிறுவனம் தரப்பில் சமரச தீர்வு மையம் மூலம் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
    • அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம்  கடந்த ஜூலை  12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வரும்போதிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

    இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரான விவேக் மற்றும் மனோபாலா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. முன்னதாக 3 மணி நேரம் இருந்த நீளம் இப்பொழுது 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

     

    தேவையற்ற சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தநிலையில், படத்தில் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்க படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.
    • பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

    படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை – அனிருத். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பொங்கலை அன்றுபுதிய போஸ்டரை வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள படக்குழு, ரஜினி துப்பாக்கியுடன் ஸ்டைலாக நடந்து வரும் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கூலர்ஸ் அணிந்துபடி செம்ம கெத்து காட்டியுள்ளார் தலைவர்.


    இதனையடுத்து வேட்டையன் ஸ்பெஷல் போஸ்டரை ரசிகர்கள் ஆவர்வத்துடன் பார்ப்பதுடன் சமூக வளைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், படத்தின் ரிலீஸ் தேதி எப்போது எனவும் கேட்டு வருகின்றனர். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய லால் சலாம், அடுத்த மாதம் ரிலீஸாகவிருப்பதால், விரைவில் வேட்டையன் ரிலீஸ் அப்டேட்டும் கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ×