search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lee Bazaar Market"

    • ஈேராட்டுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் தான் மஞ்சள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
    • மஞ்சள் விலை ஏறாமல் ஒரே மாதிரியாக விலையில் லீ பஜார் மார்க்கெட்டில் ஏலம் நடைபெற்று வந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் ஈேராட்டுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் தான் மஞ்சள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஆடிப்பண்டிகை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகிறது. இதன் காரணமாக மஞ்சள் தேவை அதிகரித்துள்ளது.கடந்த சில மாதங்களாக மஞ்சள் விலை ஏறாமல் ஒரே மாதிரியாக விலையில் லீ பஜார் மார்க்கெட்டில் ஏலம் நடைபெற்று வந்தது. தற்போது தமிழகத்தை காட்டிலும் வெளி மாநிலத்தில் இருந்து அதிக அளவில் மஞ்சள் வர தொடங்கி உள்ளது.

    இதனால் கடந்த வாரத்ைத காட்டிலும் நடப்பு வாரத்தில் மஞ்சள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். குறிப்பாக நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் குவிண்டால் ரூ.7500 முதல் ரூ.8700-க்கு ஏலம் போனது. ஏலத்தில் 60 டன் மஞ்சள் விற்பனைக்கு வந்தது. ரூ.50 லட்சத்திற்கு ஏலம் போனது.

    ×