search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Local government employees"

    பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள், கடந்த 22-ந்தேதி நகராட்சி வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    காரைக்கால்:

    உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்க ளுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடி யாக ஊதியம் வழங்க வலியு றுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரைக்கால் மாவட்ட உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார ர்களுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள், கடந்த 22-ந்தேதி நகராட்சி வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 4 நாட்களாக போராட்டம் நடைபெற்றும், அரசு சார்பில் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வரவில்லை.

    இந்நிலையில், நேற்று 4-ம் நாள் போராட்டமாக காத்திருப்பு போராட்டத்தை நடத்திவந்த ஊழியர்கள், திடீரென, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தை முற்றுகையிட சென்ற னர். விபரம் அறிந்த, காரைக்கால் நகர போலீ சார், கலெக்டர் அலு வலக வாயிலில் தடுப்பு வேலிகள் அமைத்து ஊழியர்களை, கலெக்டர் அலுவல கத்திற்குள் நுழையாவி டாமல் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் கலெக்டர் அலுவலக வாயிலில், ஊழி யர்களுக்கும், போலீசாரு க்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முற்றுகை போராட்ட த்திற்கு, காரைகால் மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு கன்வீனர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.

    காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில், உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க ப்படும், என்ற முதல மைச்சர் ரங்கசாமி வாக்குறு தியை உடனே நிறை வேற்ற வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை களை அரசு ஊழியர்க ளுக்கு வழங்கியது போல் 1.1.2016 முதல் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும்.

    பொதுவான பணிநிலை அரசாணையை அம ல்படுத்தி, ஒருமுறை நிகழ்வாக அடாக் நிரந்த ரம் செய்து, பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. போலீ சாரின் எச்சரிக்கையை மீறி ஊழியர்கள் முற்றுகையை தொடர்ந்ததால், முற்று கையில் ஈடுபட்ட சுமார் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×