என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mahashakti Peedam"
- திருமங்கலம் அருகே ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீடம் கும்பாபிஷேக விழா நடந்தது.
- கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமங்கலம்
திதிருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியில் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி பீடம் உள்ளது. இந்த கோவிலில் ஆயிரம் கண்ணுடையாள்,மகாவராஹி தேவி, பஞ்சமுக பிரத்தியங்கிராதேவி, மகா மிருத்யுஞ்யேஸ்வரராகிய மகா சக்தி பீடத்தில் அமைந்துள்ள ஆயிரம் கண்ணுடையாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பவுர்ணமி திதியும், பூச நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய தினத்தில் விக்னேசுவர பூஜை, 2-ம் கால யாக பூஜை, கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகிஆயிரம் கண்ணுடையாள் கோபுர கலசத்திற்கு வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் மதுரை, விருதுநகர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மாலையில் ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி மாரியம்மன்-சிவபெருமானுக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.